குச்ரான்வாலா இரயில் நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
'குச்ரான்வாலா இரயில் நிலையம்
گوجرانوالہ ریلوے اسٹیشن
Gujranwala Railway Station..JPG
உரிமம்பாக்கித்தான் இரயில்வே அமைச்சகம்
தடங்கள்கராச்சி-பெசாவர் இரயில் பாதை
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடுGRW[1]
சேவைகள்
முந்தைய நிலையம்   குச்ரான்வாலா இரயில் நிலையம்   அடுத்த நிலையம்
குச்ரான்வாலா நகர இரயில் நிலையம்   பாதை
கராச்சி-பெசாவர் இரயில் பாதை
  குச்ரான்வாலா கண்டோன்மெண்ட்டு இரயில் நிலையம்

குச்ரான்வாலா இரயில் நிலையம் (Gujranwala railway station) (உருது மற்றும் பஞ்சாபி: گوجرانوالہ ریلوے اسٹیشن) பாக்கித்தான் நாட்டில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் இடம்பெற்றுள்ள குச்ரான்வாலா மாவட்டத்தில் அமைந்துள்ளது. பாக்கித்தானின் ஐந்தாவது பெரிய நகரம் என்று குச்ரான்வாலா கருதப்படுகிறது. இந்நகரத்தின் பிரதான இரயில் நிலையத்தில் நான்கு நடைமேடைகள் உள்ளன. கராச்சியிலிருந்து பெசாவர் செல்லும் பிரதானமான இருப்புப் பாதையுடன் குச்ரான்வாலா இரயில் நிலையம் இணைக்கப்பட்டுள்ளது என்பது ஒரு முக்கியமான அம்சமாகும். பாக்கித்தான் இரயில்வே துறையின் அமைச்சர் இந்த இரயில் நிலையத்தை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொண்டு பணிபுரிந்து வருகிறார். இம்மேம்பாட்டுத்திட்டம் 2018 ஆம் ஆண்டில் முடிவடையுமென எதிர்பார்க்கப்படுகிறது. குச்ரான்வாலா இரயில் நிலையம், குச்ரான்வாலா நகர இரயில் நிலையம், குச்ரான்வாலா கண்டோன்மெண்ட் இரயில் நிலையம் என மூன்று இரயில் நிலையங்கள் குச்ரான்வாலா நகரில் இருக்கின்றன.

மேற்கோள்கள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]