குசுமாகரசு
| |||||
---|---|---|---|---|---|
பிறப்பு | புணே, மகாராட்டிரம் | 27 பெப்ரவரி 1912||||
இறப்பு | 10 மார்ச்சு 1999 Nashik, Maharashtra | (அகவை 87)||||
புனைபெயர் | குசுமாகரசு | ||||
தொழில் | கவிஞர், நாடக ஆசிரியர், புதின எழுத்தாளர், சிறுகதை ஆசிரியர், மாந்தநேயர் | ||||
மொழி | மராத்தி | ||||
குறிப்பிடத்தக்க படைப்புகள் | விசாக (Vishaka) (1942) நாட்சம்ராட்டு (Natsamrat) | ||||
குறிப்பிடத்தக்க விருதுகள் | 1974 மராத்திக்கான சாகித்திய அகாதமி விருது 1988 ஞானபீட விருது | ||||
இணையதளம் | |||||
kusumagraj |
விட்டுணு வாமன சிருவாதுகர் (Vishnu Vāman Shirwādkar, विष्णु वामन शिरवाडकर) (27 பிப்பிரவரி 1912 – 10 மார்ச்சு 1999), என்னும் எழுத்தாளர் குசுமாகரசு (குஷ்மாகரஜ் (மராத்தி: कुसुमाग्रज) என்னும் புனைப்பெயரில் எழுதிவந்த புகழ்பெற்ற மராத்திய எழுத்தாளர், கவிஞர், சிறுகதை ஆசிரியர், புதினப்படைப்பாளி, நாடக ஆசிரியர். இவர் மாந்தநேயராகவும், தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலைக்காகவும் உரிமைக்காகவும் அறத்துக்காகவும் பாடுபட்டவராகவும் அறியப்படுகின்றார்[1].
எழுத்துப்பணி
[தொகு]இவருடைய ஏறத்தாழ ஐம்பதாண்டு எழுத்துப்பணி இந்தியா விடுதலை பெறும் முன்பிருந்தே தொடங்கிவிட்டது. 16, கவிதைத்தொகுப்புகளும், மூன்று தொகுதி புதினங்களும், எட்டுத்தொகுதி சிறுகதைகளும், ஏழு தொகுதி உரைநடைக் கட்டுரைகளும், 18 நாடகங்களும் ஓரங்க நாடகங்களும் எழுதி புகழீட்டியுள்ளார்[2]. இவர் எழுதிய விசாக (1942) என்னும் பாடற்தொகுப்பு இந்திய விடுதலைக்கு இயக்கத்தினருக்குப் பேரூக்கம் அளித்தது. இது இன்று இந்திய இலக்கியத்தில் உயர்படைப்பாகக் கருதப்படுகின்றது.[3]. இவருடைய நாடகப் படைப்பாகிய நாட்சம்ராட்டு (Natsamrat) மராத்தி எழுத்துலகில் போற்றப்படுகின்றது.
விருதுகள்
[தொகு]இவர் நாடளாவிய பல பரிசுகளைப் பெற்றுள்ளார், அவற்றுள் 1974 ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது விருதும், 1988 ஆம் ஆண்டுக்கான ஞானபீட விருதும் குறிப்பிடத்தக்கன. இவர் உலக மராத்தி மாநாட்டின் தலைவராக 1989 இல் இருந்தார்[2]. இவர் மகாராட்டிரத்தில் புனே நகரத்தில் பிறந்தார், ஆனால் பெரும்பாலான வாழ்க்கையை மகாராட்டிரத்தில் நாசிக்கு நகரத்தில் கழித்தார்.
மராத்தி மொழி நாள்
[தொகு]இவருடைய பிறந்தநாளான பிப்ரவரி 27, மராட்டி மொழி நாளாகக் கொண்டாடப்படுகிறது.
படைப்புகள்
[தொகு]கவிதைத்தொகுப்புகள்
- விசாக (Vishakha) (1942)
- இமரேச (Himaresha) (1964)
- சந்தோமயி Chhandomayi) (1982)
- சீவனலகரி (Jeewanalahari) (1933)
- செயிச்சா குஞ்சா (Jaicha Kunja) (1936)
- சமிதா (Samidha) (1947)
- கான (Kana) (1952)
- கினாரா (Kinara) (1952)
- மராத்தி மதி (Marathi Mati) (1960)
- வாதல்வெல் (Wadalwel) (1969)
- இரசயாத்திரா (Rasayatra) (1969)
- முக்தாயன் (Muktayan) (1984)
- சிரவண் (Shrawan) (1985)
- பிரவாசி பட்சி (Prawasi Pakshi) (1989)
- பத்தேய (Patheya) (1989)
- மேகதூது (Meghdoot) (காளிதாசரைன் மேகதூதின் மொழிபெயர்ப்பு) (1956)
- சுவாகத்து (Swagat) (1962)
- பாலபோத மேவியத்தில் குசுமாகரசு) (1989)
புதினத் தொகுப்புகள்
- பூக்காரி (Phulawāli)
- சோட்டே ஆணி மோட்டே (Chhote Āni Mothe)
- சத்தாரிச்சே போல் ஆணி இதேர் கதா (Satāriche Bol Āni Iter Kathā)
- காஃகி விருத்தா காஃகி தருண் (Kāhi Wruddha, Kāhi Tarun)
- பிரேம் ஆணி மாஞ்சார் (Prem Āni Mānjar)
- அப்பாயிண்மெண்ட்டு(Appointment)
- ஆஃகே ஆணி நாஃகி (Āhe Āni Nāhi)
- விராமச்சின்னே (Wirāmachinhe)
- பிரத்திசாது (Pratisād)
- ஏக்காக்கித் தாரா (Ekāki Tārā)
- வாதேவாரல்யா சாவல்யா (Wātewaralyā Sāwalyā)
- சேக்பியரேச்சியா சோதாத்து (Shakespearechyā Shodhāt)
- உரூப்பரேசா (Roopareshā)
- குசுமாகரசாஞ்சியா பாரா கதா (Kusumāgrajānchyā Bārā Kathā)
- சாதூச்சி ஃகோதி (Jādoochi Hodi) (குழந்தைகளுக்காக)
நாடகங்கள்
- யயாத்தி ஆணி தேவயானி (Yayāti Āni Dewayāni)
- வீசா மணாலி தரத்தீலா (Weeja Mhanāli Dharateelā)
- நாட்டசம்ராட்டு (Natasamrāt)
- தூர்ச்சே திவே (Doorche Diwe)
- தூசரா பேட்வா (Dusarā Peshwā)
- வைசெயந்தி (Waijayanti)
- கௌவுந்தேயா (Kounteya)
- இராசமுகுத்து (Rājmukut)
- ஆம்ச்சே நாவ் பாபுராவ் (Āmche Nāw Bāburāo)
- விதூசக்கு (Widushak)
- ஏக்கு ஃகோத்தி வாகின் (Ek Hoti Wāghin)
- ஆனந்து (Ānand)
- முக்கியமந்திரி (Mukhyamantri)
- சந்திர சீத்தே உகாவத்து நாஃகி *Chandra Jithe Ugawat Nāhi)
- மகாந்து (Mahant)
- கைகேயி (Kaikeyi)
- பெக்கெட் (Translation of The Honour of God by Jean Anouilh)
ஓரங்க நாடகம்
- தீவானி தவா (Diwāni Dāwā)
- தீவாச்சே கர் (Dewāche Ghar)
- ப்ராக்ஷி தாரே (Prakāshi Dāre)
- சங்கர்ஷ் (Sangharsh)
- பெட் (Bet)
- நாடக் பஸத் அஹே அனி இத்தர் ஏகான்கிகா (Natak Basat Āhe Āni Itar Ekānkikā)
புதினங்கள்
- வைஷ்னவா (Waishnawa)
- ஜானவி (Jānhawi)
- கல்பனேச்சிய தீராவர் (Kalpanechyā Teerāwar)
அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்
[தொகு]- ↑ Modern Indian literature, an anthology, (Volume 2). Sahitya Akademi. 1992. p. 846. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7201-324-8.
- ↑ 2.0 2.1 "Kusumagraj is dead". Indian Express. 11 March 1999. http://www.indianexpress.com/res/web/pIe/ie/daily/19990311/ige11083.html.
- ↑ K. M. George, ed. (1997). Masterpieces of Indian literature, (Volume 1). National Book Trust. p. 927. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-237-1978-7.