குசாகோட் மகாதேவர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குசாகோட் மகாதேவர் கோயில், இந்தியாவின் கேரளாவில் உள்ள ஒரு கோயிலாகும். கேரளாவின் திருவிதாங்கூர் தேவஸ்தான வாரியத்தின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள "பெரிய" கோயில்களின் கீழ் இந்தக் கோயிலும் உள்ளது.

விழாக்கள்[தொகு]

இக்கோயிலின் முக்கிய திருவிழாக்கள் ஆண்டுதோறும் எட்டு நாள்கள் கொண்டாடப்படுகின்ற "திருக்கொடியேட்டு விழா", சிவராத்திரி மற்றும் திருவாதிரை நாட்கள் ஆகியவையாகும். ஸ்ரீகண்டேஸ்வரம் கோயிலுக்கு அடுத்தபடியாக இக்கோயிலில் சிவராத்திரி விழா மிகச் சிறப்பாகக்கொண்டாடப்படுகிறது.

வேண்டுதல்கள்[தொகு]

பக்தர்கள் தம் வேண்டுகோள்களை நிறைவேற்றிக்கொள்ள இக்கோயிலுக்கு வருகிறார்கள். [1]

மேற்கோள்கள்[தொகு]