உள்ளடக்கத்துக்குச் செல்

குங் பூ பாண்டா 2

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குங்_பூ_பாண்டா_2
இயக்கம்ஜெனிபர் யூ நெல்சன்
தயாரிப்புமெலிசா கப்
மூலக்கதைCharacters created
படைத்தவர் Ethan Reiff
Cyrus Voris
திரைக்கதை
இசைஹான்ஸ் சிம்மர்
ஜோன் பவல்
நடிப்பு
படத்தொகுப்புகிளாரே நைட்டு
கலையகம்டிரீம்வேர்க் அனிமேசன்சு
விநியோகம்பராமவுன்ட் பிக்சர்சு
வெளியீடுமே 22, 2011 (2011-05-22)(Hollywood premiere)
மே 26, 2011 (United States)
ஓட்டம்90 நிமிடங்கள்
நாடுஐக்க்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$150 million[1]
மொத்த வருவாய்$665.7 million[2]

குங் பூ பாண்டா 2 என்பது 2011 ஆம் ஆண்டு வெளிவந்த ஓர் அமெரிக்க அனிமேசன், அதிரடி, நகைச்சுவை, சண்டைக் கலைத் திரைப்படம் ஆகும், இத்திரப்படத்தை ஜெனிபர் யூ நெல்சன்  இயக்கினார், டிரீம்வேர்க் அணிமேசன்சு இத்திரைப்படத்தை தயாரித்தது, அத்துடன் பராமவுன்ட் பிக்சர்ஸ் நிறுவனம் இதனை விநியோகம் செய்தது. 2008 ஆம் ஆண்டில் வெளிவந்த குங் பூ பாண்டா திரைப்படத்தின் தொடர்ச்சியே இத்திரைப்படம், மேலும் குங்பூ பாண்டா திரைப்படத் தொடரின் இரண்டாவது திரைப்படமும் இதுவே ஆகும்.

இத்திரைப்படத்தில் கதாநாயகனான பூ தனது வரலாறை தானாகவே அறிந்துகொளவதுடன், சீனாவை ஆண்டு வரும் கொடூரமான அரசானா. சென், எனும் வெள்ளை மயில் ஒன்றிலிருந்து சீனாவை எவ்வாறு காப்பாறுகின்றது. மேலும் தன்னுள் ஒளிந்திருக்கும் பல அபூர்வ சக்திகளை பூ வெளிக்கொணருகின்றது. அத்துடன் பூ ஓர் சிறந்த குங்பூ வீரராக இத்திரைப்படத்தின் மூலமாக சிறப்ப்பிக்கப்படுகிறார். இத்திரைப்படக் கதாப்பாத்திரங்களின் குரல்களை ஜேக் பிளாக், டஸ்டின் கொப்மான், ஏஞ்சலினா ஜோலி, இயன் மக்கசென், சேத் ரோகன், இலூசி லியு, மிசெல் இயோ, டேவிட் கோஸ், டுக் கிம், ஜேம்ஸ் காங், ஜாக்கி சான் ஆகியோர் வழங்கியுள்ளனர்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Kaufman, Amy (May 25, 2011). "Movie Projector: Memorial Day weekend to soar with Hangover, Kung Fu Panda sequels". Los Angeles Times. http://latimesblogs.latimes.com/entertainmentnewsbuzz/2011/05/movie-projector-memorial-day-weekend-to-soar-with-hangover-kung-fu-panda-sequels.html. பார்த்த நாள்: May 27, 2011. 
  2. "Kung Fu Panda 2". Box Office Mojo. Amazon.com. பார்க்கப்பட்ட நாள் September 12, 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குங்_பூ_பாண்டா_2&oldid=3817688" இலிருந்து மீள்விக்கப்பட்டது