குகா பர்ரே
குகா பர்ரே Kuka Parray | |
---|---|
இறப்பு | ஆச்சின், பந்திபோரா மாவட்டம், சம்மு காசுமீர் மாநிலம், இந்தியா | 13 செப்டம்பர் 2003
இறப்பிற்கான காரணம் | தீவிரவாதிகளால் பதுங்கியிருந்து கொல்லப்பட்டார் |
மற்ற பெயர்கள் | முகமது யூசுப் பர்ரே |
அறியப்படுவது | கிளர்ச்சிக்கு எதிரான இயக்கம் சம்மு காசுமீர் மாநிலம், இந்தியா |
அரசியல் கட்சி | சம்மு காசுமீர் விடுதலை முன்னணி |
குகா பர்ரே (Kuka Parray) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். முகமது யூசுப் பர்ரே என்ற பெயராலும் இவர் அறியப்படுகிறார். காசுமீரில் இவர் சட்டமனற உறுப்பினராகவும் சம்மு & காசுமீர் விடுதலை முன்னணி கட்சியின் நிறுவனராகவும் இருந்தார்.[1] இக்வான்-உல்-முசுலிமூன் என்ற அரசாங்க சார்பு போராளிகள் அமைப்பை நிறுவுவதற்கு முன்பு, காசுமீரி மொழியில் நாட்டுப்புற பாடல்கள் பாடுகின்ற ஒரு நாட்டுப்புறப் பாடகராகவும் இவர் அறியப்பட்டார். [2][3] சம்மு-காசுமீரில் பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் இந்தியப் படைகளுக்கு இவரது மரணம் பெரும் அடியாகக் கருதப்படுகிறது. அப்போதைய முதல்வர் முப்தி முகமது சயீத், இவரது கொலையை "அமைதி நடவடிக்கைக்கு பின்னடைவு" என்று விவரித்தார்.
இறப்பு
[தொகு]சம்மு காசுமீர் மாநிலம் பந்திபோரா மாவட்டம் சோனாவாரியில் துடுப்பாட்ட போட்டியை துவக்கி வைக்க பர்ரே சென்று கொண்டிருந்த போது, மறைந்திருந்த தீவிரவாதிகள் இவரது காரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பர்ரே இறந்தார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Kuka Parrey shot dead". தி இந்து. 14 September 2003 இம் மூலத்தில் இருந்து 27 October 2003 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20031027105104/http://www.hindu.com/2003/09/14/stories/2003091406190100.htm.
- ↑ "Dance of death on bloody Saturday". The Telegraph. 14 September 2003 இம் மூலத்தில் இருந்து 6 October 2003 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20031006160936/http://www.telegraphindia.com/1030914/asp/frontpage/story_2364518.asp.
- ↑ "Former Militant Parray Killed In J&K Ambush". The Asian Age. http://www.jammu-kashmir.com/archives/archives2003/kashmir20030913c.html.