கீர்த்தனாரஞ்சிதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கீர்த்தனாரஞ்சிதம் என்பது ஒரு இசுலாமிய, கருநாடக இசைக் கீர்த்தனைகள் அடங்கிய நூலாகும். இதை கர்னாடக இசையை முறைப்படி கற்றுத் தேர்ந்தவரான முஹம்மது அப்துல்லா லெப்பை என்பவர் பாடிய கீர்த்தனைகளின் தொகுப்பாகும். இந்த நூலை 1909இல் அவர் பதிப்பித்து வெளியிட்டார். இந்த நூலில் 90 கீர்த்தனைகள் இசைக்குறிப்புகளோடு உள்ளன. 1963இல் இரண்டாம் பதிப்பாக இலங்கையில் இது வெளிவந்தது. தற்போது முஹம்மது அப்துல்லா லெப்பையின் பெயரன்களால் மூன்றாம் பதிப்பாக நூலை வெளியிட பணிகள் நடந்துவருகின்றன. காயல்பட்டினம் பள்ளிவாசல்களில் மூத்த இசுலாமிய இசைஞர்களால் முன்னோர் பாடிய அதே ராகத்தில், அதே மரபு சார்ந்த முறையில் இன்றும் பாடப்படுகின்றன.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. சௌந்தர மகாதேவன் (2018 ஆகத்து 19). "கீர்த்தனாரஞ்சிதம்: இஸ்லாமிய கர்னாடக இசை நூல்!". கட்டுரை. இந்து தமிழ். 20 ஆகத்து 2018 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |date= (உதவி)

வெளி இணைப்புகள்[தொகு]

கீர்த்தனாரஞ்சிதம், தமிழிணைய மின்னூலகத்தில்[தொடர்பிழந்த இணைப்பு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கீர்த்தனாரஞ்சிதம்&oldid=3240442" இருந்து மீள்விக்கப்பட்டது