கிவாங்ச் தத்லது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கிவாங்ச் தத்லது
Songül Öden and Kıvanç Tatlıtuğ 2009 (cropped).jpg
பிறப்பு27 அக்டோபர் 1983 (1983-10-27) (அகவை 38)
அதனா, துருக்கி
பணிநடிகர், வடிவழகர்
செயற்பாட்டுக்
காலம்
2002–இன்று வரை
வாழ்க்கைத்
துணை
பாசக் டிஸர் தத்லது (தி. 2016)
[1]

கிவாங்ச் தத்லது (Kıvanç Tatlıtuğ) (பிறப்பு: 27 அக்டோபர் 1983)[2] என்பவர் துருக்கிய நாட்டு நடிகர், வடிவழகர் மற்றும் முன்னாள் கூடைப்பந்து வீரர் ஆவார். இவர் துருக்கியில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவர் மற்றும் மூன்று தங்க பட்டாம்பூச்சி விருதுகள் மற்றும் யெசிலாம் சினிமா விருது உட்பட பல விருதுகளை வென்றுள்ளார். இவர் 2002 ஆம் ஆண்டின் துருக்கியின் சிறந்த வடிவழகர் மற்றும் உலகின் சிறந்த வடிவழகர் ஆகிய போட்டிகளில் வென்றுள்ளார்.[3][4]

இவர் 2005 ஆம் ஆண்டு முதல் குமுஸ் (2005-2007), அஸ்க் ஐ மெம்னு (2008-2010), குசே கோனி (2011-2013), செசூர் வெ கோஸல் (2016-2017) போன்ற பல வெற்றிகரமான தொலைக்காட்சித் தொடர்களில் நடித்ததன் மூலம் விமர்சன ரீதியான பாராட்டையும் சர்வதேச அங்கீகாரத்தையும் பெற்றார்.[5]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிவாங்ச்_தத்லது&oldid=3241819" இருந்து மீள்விக்கப்பட்டது