கிவலீனா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிவலீனாத் தீவின் வான் தோற்றம்

கிவலீனா அமெரிக்க ஐக்கிய நாட்டின் அலாஸ்கா மாகாணத்தில் உள்ள தீவுச் சிற்றூர் ஆகும். இத் தீவு உயர்ந்து வரும் கடல்மட்டத்தாலும் கடற்கரை அரிப்பாலும் 2025 ஆம் ஆண்டுவாக்கில் கடலால் கொள்ளப்படும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

இத் தீவில் வசிப்போர் பழங்குடியின மக்களாவர். 2010 ஆம் ஆண்டின் மக்கட்தொகைக் கணக்கெடுப்பின் படி இங்கு 377 பேர் வசித்தனர். இங்கு பள்ளிக்கூடம் ஒன்றும் மின்நிலையம் ஒன்றும் அமைந்துள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிவலீனா&oldid=1679370" இருந்து மீள்விக்கப்பட்டது