உள்ளடக்கத்துக்குச் செல்

கிளீமெங்கோ சுழற்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கிளீமெங்கோ சுழற்சி (Kleemenko cycle) என்பது வாயுக்களை குளிர்விக்க அல்லது நீர்மமாக்கப் பயன்படும் ஒற்றை-பிரவாக கலப்பு- குளிர்பதன நுட்பமாகும். இதை ஒற்றை- ஓட்ட பிரவாகச் சுழற்சி என்ற பெயராலும் அழைக்கலாம். குளிரூட்டும் செயல்முறையின் ஒரு சுழற்சியில் பல்லங்க குளிரூட்டிகள் பயன்படுத்தப்பட்டால் கிளீமெங்கோ சுழற்சி என்ற சொற்றொடர் பயன்படுத்தப்படுகிறது [1]. உருசிய விஞ்ஞானி அலெக்சாண்டர் பெட்ரோவிச் கிளீமெங்கோ 1959 ஆம் ஆண்டு டென்மார்க்கின் கோபனேகனில் நடந்த 13 ஆவது பன்னாட்டு குளிர்பதன மாநாட்டின் செயல்முறைகளில் இந்த ஒற்றை- ஓட்ட பிரவாகச் சுழற்சியைக் குறித்து விவரித்தார். 1960 ஆம் ஆண்டு பெர்கமான் அச்சகம் வெளியிட்ட குளிர்பதன அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் முன்னேற்றம் என்ற நூலின் முதலாவது தொகுதியில் 34-39 பக்கங்களில் இது வெளியிடப்பட்டது [2].

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "History of cryogenics". Archived from the original on 2018-03-27. பார்க்கப்பட்ட நாள் 2020-04-24.
  2. Rectification column with two component closed heat exchange cycle

புற இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிளீமெங்கோ_சுழற்சி&oldid=3549904" இலிருந்து மீள்விக்கப்பட்டது