ஆம்ப்சன்-லிண்டே சுழற்சி முறை

ஆம்ப்சன்-லிண்டே சுழற்சியானது (The Hampson-Linde Cycle) குறிப்பாகக் காற்றிலுள்ள வாயுக்களைப் பிரித்தெடுத்து அதில் உள்ள வாயுக்களைத் திரவமாக்கப் பயன்படும் முறையாகும். வில்லியம் ஆம்ப்சன் மற்றும் கார்ல் வான் லிண்டே ஆகியோர் 1895 ஆம் ஆண்டில் இம்முறையின் காப்புரிமைக்காகத் தனித்தனியே பதிவு செய்திருந்தனர்.[1]
ஆம்ப்சன்-லிண்டே அமைப்புகளானவை ஒரு நேர்-பின்னூட்ட குளிர்விக்கும் முறையான மீளாக்கக் குளிர்வித்தல் முறையை அறிமுகப்படுத்தின.[2] வெப்பத்தைப் பரிமாற்றம் செய்வதற்கான அமைப்புகள் ஒரு படிநிலையிலான குளிர்வித்தலையும் தாண்டி, குறிப்பிட்ட வாயுக்களைத் திரவமாக்கத் தேவைப்படும் மிகக்குறைவான வெப்பநிலைகளைக்கூட அடைவதற்குத் தேவையான தனித்த வெப்பநிலை வேறுபாடுகளை அனுமதிக்கக்கூடியவையாக உள்ளன.
ஆம்ப்சன்-லிண்டே சுழற்சியானது விரிவாக்கப் படிநிலையில் மட்டுமே சிமென்சு சுழற்சி மாதிரியிலிருந்து மாறுபடுகிறது. சிமென்சு சுழற்சி மாதிரியில் வாயுவானது வெளி வேலையைச் செய்ய அனுமதிக்கப்பட்டு குளிர்விக்கப்படுகிறது. ஆனால், ஆம்ப்சன்-லிண்டே சுழற்சியானது முழுக்க, முழுக்க சூல்-தாம்சன் விளைவினைச் சார்ந்தேயுள்ளது. இது குளிர்விக்கும் பகுதியானது, எந்தவித அசையும் பகுதிகளைக் கொண்டிருக்கத் தேவை எழாத ஒரு நன்மையைக் கொண்டுள்ளது.[1]
சுழற்சி[தொகு]

- வாயுவை அழுத்துவதன் மூலம் — சுழற்சி முறைக்குள் சென்று வர வாயுவிற்குத் தேவைப்படுகின்ற ஆற்றலை வெளியிலிருந்து தருவதன் மூலம் வெப்பப்படுத்தப்படுகிறது.
- வாயுவானது, ஒரு குளிர்விக்கும் சூழலுக்குள் உட்படுத்துவதன் மூலம், அதன் வெப்பத்தையும், ஆற்றலையும் பகுதியளவு இழக்கச் செய்வதன் மூலம் குளிர்விக்கப்படுகிறது.
- அடுத்த மற்றும் இறுதிப்படிநிலையில் முன்னதாகக் கிடைத்த வாயுவானது, வெப்பப் பரிமாற்றி மூலம் குளிர்விக்கப்படுகிறது.
- வாயுவானது, சூல்-தாம்சன் விளைவிற்குட்படுத்துவதன் மூலமாக, அதாவது அதன் வெப்பத்தை நீக்குவதன் மூலமும், ஆற்றலைப் பாதுகாப்பதன் மூலமும் (முன்பு இயக்க ஆற்றலாக இருந்தது தற்போதைய நிலையாற்றலாக மாறியுள்ளது) மேலும் குளிர்விக்கப்படுகிறது.
- தற்போதைய சுழற்சியில் வாயுவானது அதன் மிகக் குளிர்விக்கப்பட்ட சூழ்நிலையில் உள்ளது. இவ்வாயுவானது மீண்டும் இதே சுழற்சிக்கு உள்ளாக்கப்படுகிறது.
- படிநலை 3-இல் குளிர்விப்பானாக பங்கேற்கும் போது வெப்பப்படுத்தப்படுகிறது, பிறகு,
- மற்றுமொரு அல்லது அடுத்த சுழற்சியைத் தொடங்க முதல் படிநிலைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அழுத்தப்படுவதன் மூலம் சிறிதளவு வெப்பப்படுத்தப்படுகிறது.
ஒவ்வொரு சுழற்சியிலும், நிகர குளிர்வித்தலானது சுழற்சியின் முதல் படிநிலையில் சேர்க்கப்படும் வெப்பத்தை விட அதிகமாக காணப்படும். மேலும், மேலும் பல சுழற்சிகளுக்கு வாயுவானது உட்படுத்தப்படும் போது மேலும் குளிர்விக்கப்பட்டு விரிவாக்கமடையும் உருளையில் வாயுவின் விரிவாக்கம் மேலும் கடினமான செயலாகிறது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 "Technical information". Kryolab, Lund University இம் மூலத்தில் இருந்து 30 அக்டோபர் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161030213642/http://kryolab.fysik.lu.se/dokument/e_techn.html. பார்த்த நாள்: 26 January 2013.
- ↑ A.T.A.M. de Waele, Basics of Joule–Thomson Liquefaction and JT Cooling, Journal of Low Temperature Physics, Vol.186, pp.385-403, (2017), DOI: 10.1007/s10909-016-1733-3, http://link.springer.com/article/10.1007/s10909-016-1733-3.