கிளிவெட்டி சிவன் ஆலயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கிளிவெட்டி சிவன் கோயில் இலங்கையின் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பாரதிபுரம் கிளிவெளிவெட்டியில் அமைந்துள்ளது. மூதூர் மட்டக்களப்பு முதன்மை வீதிக்கு அருகில் உள்ள இக்கோயில் மூதூர் தோப்பூர் போன்ற பகுதிகளிலிருந்து கொழும்புக்கான தரைவழிப்பயணத்தை மேற்கொள்கின்ற அனைவரும் வணங்கிச் செல்லும் முதன்மைக் கோயில் ஆகும்.

இவ்வூருக்கு அருகில் ஆஸாத்நகர், ஜின்னாநகர் போன்ற இசுலாமிய ஊர்களும் தெகிவத்த என்னும் சிங்கள ஊரும் அமைந்துள்ளது. பாரதிபுரத்தில் 500க்கும் மேற்பட்ட இந்துக் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.

புதிதாக கருவறை அர்த்தமண்டபம், மகாமண்டபம். தரிசன மண்டபம், மடப்பள்ளி என்பன மறு சீரமைக்கப்பட்டுளன. கூடிய விரைவில் பெரும் திருக்குடமுழுக்கும் நடைபெற உள்ளது.

ஆதாரங்கள்[தொகு]

  1. ஈழத்துச் சிவாலயங்கள், வித்துவான் வசந்தா வைத்திய நாதன்