கிளாசுதாலைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிளாசுதாலைட்டு
Clausthalite
பொதுவானாவை
வகைசெலீனைடு கனிமம்
வேதி வாய்பாடுPbSe
இனங்காணல்
நிறம்நீலச்சாம்பல் நிறம் முதல் ஈயச் சாம்பல் நிறம்
படிக இயல்புதிண்ணிய மணிகளுடன் நிறைவடிவ படிகங்கள்
படிக அமைப்புசம அளவை - அறு எண்முகம் (4/m 3 2/m)
பிளப்பு{001} முழுமை, {010} முழுமை, {100} முழுமை
மோவின் அளவுகோல் வலிமை2.5
மிளிர்வுஉலோகத்தன்மை
கீற்றுவண்ணம்சாம்பல்கருப்பு
ஒளிஊடுருவும் தன்மைஒளிபுகாது
ஒப்படர்த்தி7.6 - 8.8
மேற்கோள்கள்[1][2][3]

கிளாசுதாலைட்டு (Clausthalite) என்பது PbSe என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிமம் ஆகும். ஈயசெலீனைடு கனிமமான இது கலீனா (PbS) கனிமத்துடன் சேர்ந்து திண்மக்கரைசலாக உருவாகிறது.

தோற்றம்[தொகு]

பிற செலீனைடுகள் மற்றும் பாதரச படிவுகளுடன் குறைவு கந்தக வெப்பநீர் படிவுகளில் கிளாசுதாலைட்டு தோன்றுகிறது. டைமானைட்டு, கிளாக்மானைட்டு, பெர்சிலியனைட்டு, உமாங்கைட்டு, தங்கம், சிடைபியோபலேடினைட்டு மற்றும் யுரேனினைட்டு ஆகிய கனிமங்களுடன் இணைந்து கிளாசுதாலைட்டு காணப்படுகிறது [1].

முதன்முதலில் 1832 ஆம் ஆண்டில் கண்டறியப்பட்ட இக்கனிமம் செருமனியில் [3] உள்ள ஆர்சு மலையில் கிளாசுதால் – செல்லர்பெல்டு பகுதியில் கிடைக்கப்பெற்றதால் கிளாசுதாலைட்டு என்ற பெயர் பெற்றது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிளாசுதாலைட்டு&oldid=2082619" இலிருந்து மீள்விக்கப்பட்டது