கிளவுட் (வீடியோ விளையாட்டு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கிளவுட் (Cloud) என்பது 2005 இல் தென் கலிஃபோர்னியா பல்கலைக்கழக, ஊடாட ஊடகச் செயல்நிரல் துறையை சேர்ந்த மாணவர்களால் உருவாக்கப்பட்ட ஒரு தனிப்பட்ட புதிர் காணொளி விளையாட்டு. இந்தக் குழு பல்கலைக்கழகத்திடம் இருந்து 20,000 அமெரிக்க டாலரைப் கொடையாகப் பெற்று 2005 இல் இந்த வீடியோ விளையாட்டினை உருவாக்கத் தொடங்கியது. பின், அதே வருடம் அக்டோபரில் இலவச தரவிறக்கத்திற்காக வெளியிடப்பட்டது. ஜூலை 2006 க்குள், இந்த விளையாட்டை வெளியிட்ட இணையத்திற்கு 6 மில்லியன் வருகை வந்தது. மேலும் 600000 முறை இந்த விளையாட்டு தரவிறக்கம் செய்யப்பட்டது.[1][2][3]

இந்த விளையாட்டு மருத்துவமனை படுக்கையில் உறங்கிக் கொண்டிருக்கும் போது பறப்பது போன்ற கனவினைக் காணும் ஒரு பையனை மையப்படுத்தி அமைக்கப்பட்டிட்ருக்கிறது. இதன் முன்னணி வடிவமைப்பாளரான ஜேனோவா ஜென்னின் குழந்தைப் பருவத்தை ஒரளவு அடிப்படையாக கொண்டே இது வடிவமைக்கப்பட்டது. இவர் பல நேரங்களில் ஆஸ்த்துமாவிற்காக மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டிருந்தார். அந்த சமயங்களில் அறையில் தனியாக இருக்கும்போது பகல்கனவு காணும் பழக்கம் இவருக்கு இருந்ததாம். விளையாடுபவர்கள் அந்தப் பையனாக கற்பனை செய்துகொள்ள வேண்டும். கனவு உலகத்தில் உள்ள மேகங்களைக் கையாண்டு, புதிரைக் கண்டுபிடிப்பதே இந்த விளையாட்டு. காணொளி விளையாட்டு தொழிற்துறையில் பொதுவாக புறக்கணிக்கப்படும் விளையாடுபவர்களின் உணர்ச்சிகளைத் தூண்டுவது இந்த விளையாட்டின் முக்கிய நோக்கம் ஆகும். 

2006 ஆம் ஆண்டு நடந்த ஸ்லாம்டேன்ஸ் குரில்லா கேம்ஸ் போட்டியில் சிறந்த மாணவர் தத்துவம் விருதினை கிளவுட் விளையாட்டு பெற்றுச் சென்றது. 2006 ஆம் ஆண்டு இண்டிபெண்டட் கேம்ஸ் ஃபெஸ்டிவலில் சிறந்த மாணவர் கண்காட்சி விருதினையும் பெற்றது. இந்த விளையாட்டு காட்சி, இசை, சூழல் போன்றவற்றிற்காக சிறந்த விமர்சனங்களையும் பெற்றது. கிளவுட் விளையாட்டினை ஒரு வணிக ரீதியான விளையாட்டாக மறு உருவாக்கம் செய்ய எண்ணி சென் மற்றும் தயாரிப்பாளர் கெல்லி சாண்டைகோ இருவரும் இணைந்து தட்கேம்கம்பெனியை உருவாக்கினர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Cloud Instructional Booklet" (PDF). University of Southern California. 2006-07-28. pp. 5, 8. Archived from the original (PDF) on 2016-08-26. பார்க்கப்பட்ட நாள் 2011-01-24.
  2. Usher, William (2006-11-01). "Cloud Review by Game Tunnel". Game Tunnel. Archived from the original on 2009-04-13. பார்க்கப்பட்ட நாள் 2011-01-24.
  3. "IGF Student Showcase Q&A: Cloud Team (Cloud)". Gamasutra. UBM. 2006-02-02. Archived from the original on 2010-05-10. பார்க்கப்பட்ட நாள் 2011-01-21.