கிறிஸ்டினா கோக்
கிறிஸ்டினா கோக் | |
---|---|
![]() விண் உடையில் கோக் | |
நாசா விண்வெளி வீராங்கனை | |
தேசியம் | அமெரிக்கர் |
நிலை | செயலில் |
பிறப்பு | கிறிஸ்டினா ஹம்மாக் சனவரி 29, 1979 கிராண்ட் ராபிட்ஸ், மிச்சிகன், ஐக்கிய அமேரிக்கா |
பயின்ற கல்வி நிலையங்கள் | வட கரோலினா மாநில பல்கலைக்கழகம் |
விண்வெளி நேரம் | 328 நாட்கள் 13 மணிகள் 58 நிமிடங்கள் |
தெரிவு | 2013 நாசா குழு |
மொத்த விண்வெளி நடைகள் | 6 |
மொத்த நடை நேரம் | 42h 15min |
பயணங்கள் | Soyuz MS-12/Soyuz MS-13 (Expedition 59/60/61) |
திட்டச் சின்னம் | ![]() ![]() ![]() |
கிறிஸ்டினா காம்பால் கோக் ( பிறப்பு: 29, சனவரி, 1979 ) என்பவர் ஒரு அமெரிக்க பொறியாளர் மற்றும் 2013 ஆம் ஆண்டில் நாசா விண்வெளி வீரங்கனை ஆவார். [1] [2] இவர் வட கரோலினா மாநில பல்கலைக்கழகத்தில் மின் பொறியியல் மற்றும் இயற்பியலில் இளம் அறிவியல் பட்டங்களையும், மின் பொறியியலில் முது அறிவியல் பட்டத்தையும் பெற்றவர். [3] விண்வெளி வீரராக ஆவதற்கு சற்று முன்பு, இவர் அமெரிக்க சமோவாவின் நிலைய தலைவராக தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தில் பணியாற்றினார். [4]
2019, மார்ச், 14 அன்று, கோச் விமானப் பொறியாளராக அனைத்துலக விண்வெளி நிலையத்திற்கு வெளியே சென்று மீன்டும் உள்ளே மேற்கொண்ட 59, 60, 61 ஆகிய பயணங்களில் சென்றார். 2019 அக்டோபர் 18 அன்று, சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வெளியே உள்ள சூரிய மின்கலத்தை மாற்றுவதற்கான பெண்கள் மட்டுமே மேற்கொண்ட முதல் விண்வெளி நடையில் இவரும் ஜெசிகா மீரும் கலந்து கொண்டு, பெண்கள் மட்டுமே தனித்து வெண்வெளி நடையில் கலந்துகொண்ட முதல் பெண்கள் என்ற சாதனையை செய்தனர். [5] [6] 2019 திசம்பர் 28, அன்று, கோச் விண்வெளியில் நீண்டகாலம் (328 நாட்கள்) இருந்த பெண்மணி என்ற புதிய சாதனையை செய்தார். [7] இவர் 2020 பெப்ரவரி 6 அன்று விண்வெளியில் இருந்து புவிக்கு திரும்பினார் [8]
டைம் இதழ் வெளியிட்ட 100 பட்டியிலில் 2020 ஆண்டின் மிக முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் பட்டியிலில் கோச் இடம்பெற்றார். [9]
குறிப்புகள்
[தொகு]- ↑ Roberts, Jason (August 3, 2017). "2013 Astronaut Class". தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (ஐக்கிய அமெரிக்கா). Archived from the original on June 21, 2013. Retrieved June 19, 2013.
- ↑ "NASA's Newest Astronauts Complete Training". NASA. July 9, 2015.
- ↑ "Christina Hammock Koch NASA Astronaut". NASA. November 27, 2015. Retrieved March 15, 2019.
- ↑ "NASA announces eight new astronauts, half are women". June 17, 2013. http://phys.org/news/2013-06-nasa-astronauts-women.html.
- ↑ "Christina Koch Lands on Earth, and Crosses a Threshold for Women in Space - The astronaut completed three all-female spacewalks and set a record for time in space, but you should remember her for much more.".
- ↑ "Space walking". DK Smithsonian Space: a visual encyclopedia (2nd ed.). New York: DK Publishing. 2020. p. 97. ISBN 9781465494252.
- ↑ "Koch marks record stay in space for female astronaut".
- ↑ "New female space record for Nasa astronaut".
- ↑ "Astronauts Christina Koch and Jessica Meir: The 100 Most Influential People of 2020". Time. Retrieved 2020-09-23.