கிர்பன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிர்பன்
ஒரு கிர்பனும் (மேல்) அதன் உறையும்
வகைவாள்
அமைக்கப்பட்ட நாடுபஞ்சாப் பகுதி, மத்தியகால இந்தியா
அளவீடுகள்
நீளம்எந்த அளவும்

வாள் வகைகூர்மையானது

கிர்பன் (Kirpan) என்பது சீக்கியர்களால் சுமக்கப்படும் ஒரு குறுவாளாகும். [1] [2] இது 1699 ஆம் ஆண்டில் குரு கோவிந்த் சிங் கொடுத்த ஒரு மதக் கட்டளையின் ஒரு பகுதியாகும். அதில் அவர் சீக்கியர்களுக்கு ஒரு விருப்பத்தை வழங்கினார். அவர்கள் ஏற்றுக்கொண்டால் அவர்கள் விசுவாசத்தின் ஐந்து பொருட்களை தன்னுடன் எல்லா நேரங்களிலும் அணிய வேண்டும் (ஐந்து பொருட்களில் குறுவாளுடன் வெட்டப்படாத முடி, முடிக்கு ஒரு மர சீப்பு, ஒரு இரும்பு வளையல், 100% பருத்தியினாலான உள்ளாடை, (எலாஸ்டிக் இருக்கக்கூடாது) போன்றவை)

சொற்பிறப்பியல்[தொகு]

பஞ்சாபி வார்த்தையில் கிர்பான் என்றச் சொல் இரண்டு வேர்களைக் கொண்டுள்ளது. கிருபா என்றால் கருணை" என்றும், ஆன் என்றால் "மரியாதை" அல்லது "கண்ணியம்" எனப்பொருள்படும்.

அளவு[தொகு]

கிர்பான்கள் வளைந்தும் கூர்மையாகவும் இருக்க வேண்டும். [2] மேலும், கிர்பான்கள் எஃகு அல்லது இரும்பினால் செய்யப்பட்டிருக்க வேண்டும். [3]

சட்டபூர்வ அனுமதி[தொகு]

நவீன காலங்களில், சீக்கியர்கள் ஆயுதங்கள் எடுத்துச்செல்வது மீதான தடைகள் காரணமாக இதை எடுத்துச் செல்ல அனுமதிப்பது பற்றி விவாதம் நடந்து வருகிறது. சில நாடுகள் சீக்கியர்களுக்கு இதை எடுத்துச் செல்வதை அனுமதிக்கின்றன.

வணிக ரீதியான விமானங்களில் கிர்பான்களை எடுத்துச் செல்ல அனுமதிக்கலாமா அல்லது பாதுகாப்பு செயல்படுத்தப்படும் பகுதிகளுக்கு செல்லலாமா என்பது போன்ற சட்டப்பூர்வமாக கண்டிப்பாக இல்லாத பிற சிக்கல்கள் எழுகின்றன

குறிப்புகள்[தொகு]

  1. "BBC - Religions - Sikhism: The Five Ks". Archived from the original on 28 September 2017. பார்க்கப்பட்ட நாள் 8 October 2017.
  2. 2.0 2.1 Khalsa, Sukhmandir. "Kirpan - kakar - Sikh ceremonial short sword". About.com. Archived from the original on 5 April 2015. பார்க்கப்பட்ட நாள் 18 March 2015.
  3. "What is the kirpan?". World Sikh Organization of Canada. Archived from the original on 2 April 2015. பார்க்கப்பட்ட நாள் 18 March 2015.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Kirpans
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிர்பன்&oldid=3240191" இலிருந்து மீள்விக்கப்பட்டது