உள்ளடக்கத்துக்குச் செல்

கிரௌஞ்ச வியூகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கிரௌஞ்ச வியூகம் என்பது மகாபாரதத்தில் நடைபெற்ற குருச்சேத்திரப் போரில் குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு போர் வியூகங்களில் ஒன்று.

விளக்கம்

[தொகு]

பதினெட்டு நாள் குருச்சேத்திரப் போரின் பதின்மூன்றாவது நாள், கௌரவர்களால் சக்கர வியூகம் அமைக்கப்பட்டு அதில் அபிமன்யு கொல்லப்படுகிறான். இதே போன்று வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு போர் வியூகங்கள் இரு தரப்பிலும் அமைக்கப்படுகிறன. அதில் பாண்டவர்களால் போரின் இரண்டாம் நாள் அமைக்கப்படுகின்ற வியூகத்திற்கு கிரௌஞ்ச வியூகம் என்று பெயர். இவ்வியூகம் ஒரு பறவையின் வடிவில் இருக்கும். அப்பறவையின் தலை, கண், இறக்கை, கால் போன்ற பகுதிகளில் நின்று போர் புரிந்த வீரர்களின் பெயர்களெல்லாம் மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.

மேற்கோள்கள்

[தொகு]
  • மகாபாரதம் பேசுகிறது, முதல் பாகம், ஐந்தாம் பதிப்பு, ஆசிரியர் சோ, பக்கம் 539, அல்லயன்ஸ் பதிப்பகம்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரௌஞ்ச_வியூகம்&oldid=3454369" இலிருந்து மீள்விக்கப்பட்டது