கிரேசு குஜ்ஜர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கிரேசு குஜ்ஜர் (ஆங்கிலம்: Grace Kujur; இந்தி: ग्रेस कुजूर-பிறப்பு 3 ஏப்ரல் 1949) என்பவர் இந்தியாவின் சார்க்கண்டு மாநிலம் ராஞ்சியைச் சேர்ந்த ஓர் ஆதிவாசி பெண் கவிஞர். இவரது தந்தை பேட்ரிக் குஜ்ஜர் மற்றும் தாய் ரூத் கெர்கெட்டா. ஓரான் (குருக்) குடும்பத்தில் பிறந்த கிரேசு குஜ்ஜர், 2008ஆம் ஆண்டு புது தில்லியில் உள்ள அகில இந்திய வானொலியின் இயக்குநரகத்தின் பொது இயக்குநரகத்திலிருந்து தலைமை இயக்குநர் (நிரல்) பதவியிலிருந்து ஓய்வு பெற்றார்.[1] கிரேசு குஜ்ஜர் 1966 முதல் எழுதத் தொடங்கினார். இவருடைய கவிதைகள் பல்வேறு இலக்கிய இதழ்கள் மற்றும் செய்தித்தாள்களான, 'இந்துஸ்தான்', 'ஆஜ்', 'யுத்ரத் ஆம் ஆத்மி', 'ஆர்யவ்ரத்', 'ஜார்கண்டி பாஷா சாகித்திய சமசுகிருதி அக்ரா' போன்றவற்றில் வெளியிடப்பட்டுள்ளன. இவருடைய கவிதைகள் 'கலாம் உட்படப் பல கவிதைத் தொகுப்புகளில் சேர்க்கப்பட்டுள்ளன. உகல்டி ஆக்' மற்றும் 'லோக்பிரியா ஆதிவாசி கவிதாயேன்' கவிதைத் தொகுப்புகளாகும்.[2] இவர் வானொலி நாடகங்கள் மற்றும் நகைச்சுவை துணுக்குகளையும் எழுதியுள்ளார். இவரது நாடகம், 'மஹுவா கிரா ஆதி ராத்', மாந்திரீகம் பற்றி மிகவும் பிரபலமாக விவாதிக்கப்படுகிறது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "हिन्दी कविताओं की रचयिता - ग्रेस कुजुर". பார்க்கப்பட்ட நாள் October 2, 2018.
  2. Lokpriya Aadivasi Kavitayen | https://www.prabhatbooks.com/lokpriya-aadivasi-kavitayen.htm
  3. "कवयित्री ग्रेस ने अपनी रचनाओं से मोहा मन". பார்க்கப்பட்ட நாள் October 2, 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரேசு_குஜ்ஜர்&oldid=3892955" இலிருந்து மீள்விக்கப்பட்டது