கிருஷ்ண பிரசாத் தென்னெட்டி
கிருஷ்ண பிரசாத் தென்னெட்டி | |
---|---|
மக்களவை-உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2024 | |
முன்னையவர் | நந்திகாம் சுரேசு |
தொகுதி | பாபட்லா |
தனிப்பட்ட விவரங்கள் | |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | தெலுங்கு தேசம் கட்சி |
வேலை | இந்தியக் காவல் பணி, அரசியல்வாதி |
கிருஷ்ண பிரசாத் தென்னெட்டி (Krishna Prasad Tenneti) என்பவர் மேனாள் இந்தியக் காவல்பணி அதிகாரியும், இந்திய அரசியல்வாதியும் இந்திய மக்களவை உறுப்பினரும் ஆவார். இவர் 2024 இந்தியப் பொதுத் தேர்தலில் ஆந்திரப் பிரதேச பாபட்லா மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார்.[1][2] இவர் தெலுங்கு தேசம் கட்சி உறுப்பினர் ஆவார். [1][3]
கல்வி
[தொகு]தென்னெட்டி ஆந்திரப் பிரதேசம் வாரங்கல்லில் உள்ள தேசியத் தொழில்நுட்ப நிறுவனத்தில் இளங்கலை பொறியியல் பட்டமும், அகமதாபாத்தில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தில் முதுநிலை மேலாண்மை பட்டயத்தையும் பெற்றுள்ளார்.[4]
தொழில்
[தொகு]தென்னெட்டி 1986ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேசத்தினைச் சேர்ந்த இந்தியக் காவல்பணி சேவை அதிகாரியாகவும், 2014 முதல் தெலங்காணாவில் ஓய்வு பெறும் வரையிலும் பணியாற்றினார். இவர் தற்போது சாம்செட்பூரில் உள்ள தேசியத் தொழில்நுட்ப நிறுவனத்தில் ஆளுநர்கள் குழு உறுப்பினராகவும் உள்ளார். [5]
மக்களவை உறுப்பினர்
[தொகு]தென்னட்டி 2024 இந்தியப் பொதுத் தேர்தலில் ஆந்திரப் பிரதேச பாபட்லா மக்களவை தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Election Commission of India". results.eci.gov.in. Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 5 June 2024.
- ↑ "TDP Election Results LIVE: Latest Updates On Krishna Prasad Tenneti". NDTV. பார்க்கப்பட்ட நாள் 6 June 2024.
- ↑ "Krishna Prasad Tenneti, Telugu Desam Representative for Bapatla (SC), Andhra Pradesh". Times of India. பார்க்கப்பட்ட நாள் 6 June 2024.
- ↑ "Sri Krishna Prasad, IPS(Retd.)".
- ↑ "Sri Krishna Prasad, IPS(Retd.)".