கிருஷ்ணாபுரம் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கிருஷ்ணாபுரம் கோயில், இந்தியாவில் கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம், ஈராட்டுப்பேட்டைக்கு அருகில் உள்ள தலப்புலம் என்னுமிடத்தில் அமைந்துள்ளது. இக்கோயிலின் மூலவர் கிருஷ்ணர் ஆவார்.

புராணம்[தொகு]

தலப்புலம் என்ற ஊரானது பழங்காலத்திலிருந்தே ஆன்மிகத்தின் மையமாக இருந்து வருகிறது. தல என்றால் "தலை", புலம் என்றால் "குக்கிராமம்" அல்லது "இடம்" என்று பொருள்படும். அதாவது "நிலங்களின் நிலம்" அல்லது மற்ற இடங்களுக்கு மேல் இருக்கும் இடம் எனப்படும். பிராமணர், சூத்திரர், பழங்குடி இனத்தவர்கள் என்ற வகையில் பல்வேறு பண்பாட்டினைப் பின்பற்றிய மக்கள் இங்கு வசித்து வந்தனர். உள் சண்டைகள். போட்டியின் காரணமாகவும் நல்வாழ்வு நாடியும் பிராமணர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றனர். வெளியேறினர். நாடோடி வாழ்க்கை முறையை வாழ்ந்த பழங்குடியினர் ஒரு குறிப்பிட்ட வசிப்பிடத்தில் வாழாமல் பிற இடங்களுக்குச் சென்றனர். சூத்திரர்கள் விவசாயத்தில் ஈடுபட்டு திருப்தியான வாழ்க்கையை நடத்தி வந்தனர். வயல்வெளிகளில் பணியில் இருந்தபோது ஒரு இரும்புக்கருவி அவர்கள் கண்ணில் பட்டது. அப்போது அவர்கள் கண்களுக்கு விசித்திரமான காட்சி தோன்றியது. இது கோயிலுக்கு அடிக்கல் நாட்டுவதற்கு காரணமாக இருக்கலாம். குக்கிராமத்தின் மக்கள் வைணவ மற்றும் சைவ பிரிவுகளை சேர்ந்தவர்கள்.

வரலாறு[தொகு]

1078ஆம் ஆண்டின் 22வது மிதுனத்தின் தாழ்மோன் மாடமோன்மூலவர் கிருஷ்ணரை கோயிலில் அமைத்தார். [1] இதுதொடர்பாக புராணக்கதை ஒன்று கூறப்படுகிறது. பொதுவாக மக்கள் சிவன் கோயில் வேண்டுமென விரும்பினர். கிருஷ்ணரை அமைக்க ஒருமித்த கருத்து காணப்படவில்லை. தாழ்மோன், தன் மனையிலிருந்து கிருஷ்ணரின் சிலையைக் கொண்டுவந்து, அங்கு மூலவராக நிறுவினார். அவரால் வழிபடப்படுவதற்கு முன்பாக அச்சிலை ஒரு பிராமணப்பெண்மணியால் வழிபடப்பட்டது. பஞ்சம், இயற்கைச்சீற்றத்திற்கு ஒரு முடிவு காணும் வகையில் சிவன் சிலையை அங்கு நிறுவ முடிவெடுத்து 1124ஆம் ஆண்டின்26ஆவது எடவத்தில் சிவன் சிலை அமைக்கப்பட்டது. தொடர்ந்து அம்மன் சிலை அமைக்கப்பட்டது. கோச்சுபுரக்கல் என்ற நாயர் குடும்பத்தார் அதன் நிர்வாகத்தையும் உரிமையையும் கொண்டிருந்தனர். பின்னர் அக்குடும்பத்தில் ஒரு பிரிவினர் நிர்வாகக்காரணம் காரணமாக அருகில் பிறிதொரு இடத்திற்குச் சென்றனர். கோச்சுபுரக்கல் குடும்பத்தார் ஒட்டுமொத்தமாக முடிவெடுத்து அதன் நிர்வாகத்தையும், உரிமையையும் 196 என்.எஸ்.எஸ்.காரயோகம் தலப்புரத்திடம் தர முடிவெடுத்தனர். இந்து சமூக நலனை முன்னிட்டு அவர்கள் தற்போது அப்பணியைச் செய்துவருகின்றனர்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிருஷ்ணாபுரம்_கோயில்&oldid=3827236" இலிருந்து மீள்விக்கப்பட்டது