கிருத்திகா நாதிக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கிருத்திகா நாதிக்
Kruttika Nadig
நாடுஇந்தியா
பிறப்பு17 பிப்ரவரி 1988
தலைப்புபெண்கள் கிராண்டு மாசுட்டர் (2009)
எலோ தரவுகோள்2387 (அக்டோபர் 2008)

கிருத்திகா நாதிக் (Kruttika Nadig) என்பவர் ஒர் இந்தியப் பெண் சதுரங்க கிராண்டு மாசுட்டர் ஆவார். மகாராட்டிராவைச் சேர்ந்த இவர் 1988 ஆம் ஆண்டு பிப்ரவரி 17 ஆம் நாள் பிறந்தார். 2008[1][2][3] ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய தேசியப் பெண்கள் சதுரங்க சாம்பியன் பட்டப்போட்டியில் விளையாடி வெற்றி பெற்றார். 2010 ஆம் ஆண்டில் உலகப் பெண்கள் சதுரங்க சாம்பியன் பட்டப் போட்டியிலும் வென்றார். முதல் சுற்றுப் போட்டியில் சகநாட்டு வீராங்கனையான அரிக்கா துரோணவள்லியிடம் தோற்றுப்போனார். 2009 ஆம் ஆண்டில் நடைபெற்ற உலக குழு சதுரங்க சாம்பியன் போட்டி, ஆசிய குழு சாம்பியன் பட்டப் போட்டிகளில் இந்தியாவின் சார்பாக விளையாடினார். 2003 ஆம் ஆண்டு 16 வயதுக்குட்பட்டோருக்கான உலக இளையோர் சதுரங்க ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியப் பெண்கள் அணியில் ஒருவராக விளையாடினார்[4]. ஒரு பத்திரிகையாளராகவும் கிருத்திகா பணிபுரிந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிருத்திகா_நாதிக்&oldid=2959861" இருந்து மீள்விக்கப்பட்டது