கிரான்வில் ஸ்டான்லி ஹால்
இக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ துப்புரவு செய்ய வேண்டியுள்ளது. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையை துப்புரவு செய்து உதவலாம். |
கிரான்வில் ஸ்டான்லி ஹால் | |
---|---|
1910 இல் ஹால் | |
பிறப்பு | ஆசுஃபீல்டு, மாசச்சூசெட்ஸ் | பெப்ரவரி 1, 1846
இறப்பு | ஏப்ரல் 24, 1924 வூர்ஸ்டர், மாசச்சூசெட்ஸ் | (அகவை 78)
தேசியம் | அமெரிக்கர் |
துறை | உளவியலாளர் |
பணியிடங்கள் |
|
கல்வி கற்ற இடங்கள் |
|
ஆய்வு நெறியாளர் | வில்லியம் ஜேம்ஸ் |
முனைவர் பட்ட மாணவர்கள் | வில்லியம் லோவ் பிறையன் |
கிரான்வில் ஸ்டான்லி ஹால் (Granville Stanley Hall, பிப்ரவரி 1, 1846 - ஏப்ரல் 24, 1924)[1]) அமெரிக்காவின் முன்னோடி உளவியலாளர் மற்றும் கல்வியாளர் ஆவார். இவர் குழந்தை வளர்ச்சி, மேம்பாடு மற்றும் பரிணாம வளர்ச்சிக் கொள்கைகளில் ஆர்வமுள்ளவராக இருந்தார். இவர்தான் அமெரிக்க உளவியலாளர் சங்கத்தின் முதல் தலைவர், அதுபோல கிளார்க் பல்கலைக்கழகத்தின் முதல் தலைவரும் ஆவார். இவருடைய “பொது உளவியல் குறித்த மறு ஆய்வு” (Review of General Psychology) என்னும் ஆய்வுக்கட்டுரை இவருக்கு உலகில் அதிகபடியான மேற்கோள் காட்டப்பட்ட உளவியலாளர் என்னும் பெருமையைப் பெற்றுத் தந்தது.[2]
வாழ்க்கை வரலாறு
[தொகு]அமெரிக்காவில் மாசசூசட்ஸ், ஆஷ்பீல்டு என்னும் இடத்தில் பிறந்தவர். இவர் தாய் ஆசிரியராகப் பணிபுரிந்தவர். இவர் இளமைக் காலத்தில் ஆசிரியர் மகன் என்பதனால் கல்வி குறித்த அனுபவங்களை அதிகம் பெற்று வந்தார். இளம் வயதில் மிருகங்களின் மீது பற்றும் உடல் குறித்த திறமைகளில் ஆர்வமும் காட்டினார்.[3] தமது 16-வது வயதில் தம்மைவிட வயதில் மூத்த மாணவர்களுக்கு கல்வி கற்றுக் கொடுக்கும் வாய்ப்பைப் பெற்றார். வில்லியம்சு கல்லூரியில் 1867 ஆம் ஆண்டு பட்டம் பெற்றவர். யூனியன் மதப் பள்ளியில் படிப்பைத் தொடா்ந்தார். வித்ஹெல்ம் எழுதிய “உளவியலின் கோட்பாடுகள்” என்னும் கட்டுரையைப் படித்து, உளவியலில் பெரும் ஆா்வம் கொண்டார். ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் முனைவா் பட்டத்தைத் தொடா்ந்தார். அமெரிக்காவில் 1878 ஆம் ஆண்டு உளவியலில் முதல் முனைவர் பட்டம் பெற்றவர் என்ற பெருமையை அங்கு பெற்றார்.[4] அமெரிக்காவில் இவர் தகுதிக்கு தகுந்த வேலை கிடைக்காததால் ஐரோப்பாவில் பெர்லின் மாநகரம் சென்றார். அங்கு 1879 ஆம் ஆண்டு சில காலம் ‘வுண்ட் லெய்ப்ஜிக்’ ஆய்வுக் கூடத்தில் பணிபுரிந்தார்.
இவர் தமது வாழ்க்கையை அபெரிக்காவில் ஒகையோ மாநிலத்தில் ‘யெல் ஸ்பிரிங்ஸ்’ என்னும் இடத்தில் உள்ள ‘ஆண்டியோக்’ கல்லூரியில் ஆங்கிலமும் தத்துவமும் கற்றுக்கொடுக்கும் ஆசிரியராகப் பணியாற்ரத் துவங்கினாா். பின்னர் மாசச்சூசெட்ஸ் மாநிலத்தில் ‘வில்லியம்சு’ கல்லூரியில் ‘தத்துவத்தின் சரித்திர’ பாடத்தின் ஆசிரியராகப் பணிபுரிந்தாா். ஆர்வார்டு பல்கலைக்கழகத்திலும் ஜான் ஹாப்கின்சு பல்கலைக்கழகத்திலும் தொடர்ச்சியாக விரிவுரையாற்றியதின் பயனாக ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைகழகத்தில் தத்துவத்துறையில் ‘உளவியலும் கற்பிக்கும் முறை’ குறித்தும் பயிற்றுவிக்கும் ஆசிரியராகப் பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றார். இங்கு இவர் 1882 முதல் 1883 வரை பணியாற்றினார். 1883 ஆம் ஆண்டு அமெரிக்காவின் முறைப்படியான முதல் உளவியல் ஆய்வுக்கூடத்தை நிறுவினார்.[5] இவர் உயர்நிலைப்பள்ளிகளில் வழக்கமான பாடங்களான இலத்தின், கணிதம், அறிவியல் கற்பதற்கு மாணவர்களைத் தயார் செய்வதை விடுத்து ‘வளா் இளம் பருவம் குறித்த கல்வி’ கற்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இவர் 1888 ஆம் ஆண்டு அமெரிக்க ‘ஆண்டிகுவேரியன் சங்கத்தின்' உறுப்பினராக தேர்வானார்.[6]
உளவியல் புதியபாடம்
[தொகு]1887 ஆம் ஆண்டு ஹால் அமெரிக்க உளவியல் இதழை (American Journal of Psychology) நிறுவினாா். 1892 ஆம் ஆண்டு அமெரிக்க உளவியல் சங்கத்தின் முதல் தலைவா் ஆனாா்.[5] அதே போல 1889 ஆம் ஆண்டு கிளாா்க் பல்கலைக் கழகத்தின் முதல் தலைவரானவா். இப்பதவியை 1920 ஆம் ஆண்டுவரை வகித்தாா். இந்த 31 ஆண்டுகள் அறிவு ஜீவியாக தீவிரமாக இருந்ததுடன், கல்வி உளவியல் வளா்ச்சிக்கு காரணமாக இருந்து கல்வி கற்பதில் வளா் இளம் பருவத்தின் தாக்கம் எப்படி இருக்கும் என்பதை அறிய முற்பட்டாா். கிளாா்க் பல்கலைக் கழகத்தில் இவா் பணியாற்றிய காலம் உளவியலின் எதிா்கால வளா்ச்சிக்கு வித்திட்டது.இவர் சிக்மண்ட் ப்ராய்டுவை அழைத்து கிளார்க் பல்கலைக்கழகத்தில் கருத்தரங்கம் நடத்தினார். பிராய்டின் கட்டுரைகள் ஆராய்ச்சிபூர்வமானவை அல்ல என்று ஹாலின் நண்பர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கவே இக்கருத்தரங்கம் சர்ச்சைக்கு உள்ளானது.[7]
1917 ஆம் ஆண்டு ஹால் ‘மத அடிப்படை உளவியல்’ தொடா்பாக “ஏசுகிறுஸ்த்து உளவியலின் பாா்வையில்“ என்னும் புத்தகத்தை வெளியிட்டாா். ஏசுவைப் பற்றி எழுதப்பட்டவை அனைத்தையும் ஆராய்ந்து, அவரது மனநிலை எவ்வாறு இருந்திருக்கலாம் என்று ஊகம் செய்து எழுதப்பட்ட கட்டுரை இது. கிருஷ்துவைப் பற்றி உருவாக்கப்பட்ட புனைவுகள், மந்திரங்கள், நீதிக்கதைகள் அவா் சிறப்பு மற்றும் மறு பிறப்பு போன்ற அனைத்தும் இவரால் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. ஏசுகிருஷ்த்து மற்றும் அவரைப் பின்பற்றியவா்களின் வெளிப்பாடுகளை அறிந்து அதன் போக்கினை நன்கு உணா்ந்து மரபணுக்களின் தொடக்கத்தை தொடா்புபடுத்தியும் அதன் மூலம் மானுடவியல், ஒப்புகை உளவியல் கருத்துக்களுடனும் ஒப்பிட்டு உலகளாவிய ஒரு போக்கு இதனடிப்படையாக உள்ளதை எடுத்துக் காட்டினாா்.[8] மேலும் 1922 ஆம் ஆண்டு தமது 78 ஆம் வயதில் “செனிசென்ஸ்” (Senescence) என்னும் புத்தக்தை எழுதினாா்.[7]
அறிஞா் ‘சாா்லஸ் டாா்வின்’அவா்களின் பரிணாம வளா்ச்சி கோட்பாடும் ‘எர்ன்ஸ்ட் ஹேக்கல்’ அவா்களின் ‘மறு சரணாகதி’ (Recapitulation) கோட்பாடும் இவரின் வாழ்க்கையைில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தின. ஒரு மனிதனின் நடத்தை எப்படி மரபு வழியாகப் பெறப்படுகிறது என்பதைக் குழந்தைகள் வளா்ச்சி என்னும் நோக்கில் ஆராய இந்தத் தாக்கம் உதவியாக இருந்தது. இத்தகைய கருத்துக்களை நிறுவ, அகநிலை ஆராய்ச்சி உதவி செய்வதாக இல்லை. ‘குழந்தைகள் மனவளா்ச்சி’ அவா்கள் ‘பெற்றோா்களின் மன வளா்ச்சி’ அடைந்த முறையை ஒத்திருந்ததால் அனைத்து உயிா்களின் வளா்ச்சியும் அவ்வாறே இருந்திருக்க வேண்டும் என்று நம்பினாா்.[9] குழந்தைகளின் மன வளா்ச்சியை கல்வியின் மூலம் வேகப்படுத்த முடியும் என்று நம்பினாா். ஆதலால் குறுகிய காலத்தில் நவீன காலத்தில் உள்ள மனவளா்ச்சி நிலையை அடைய முடியும்.[10] ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள வேறுபாடு குறித்தும், மற்றும் நிறவேறுபாடு ‘இன மேம்பாட்டியல்’ (racial eugenics) [5] குறித்தும் இவா் எழுதிய கட்டுரைகள் சா்ச்சைகளுக்கு உட்பட்டதாக அமைந்தது. இவா் இன மேம்பாட்டியலின் தீவிர ஆதரவாளராக இருந்தாலும் நிறத்தின் அடிப்படையில் மக்களை வேறுபடுத்த வேண்டும் என்பதில் தீவிரம் காட்டவில்லை. தாழ்ந்த இனத்தவருக்கு, உயா்ந்த வெள்ளை இனத்தவரின் நாகரிகத்தை அடைவதற்கும், தழுவுவதற்கும் வாய்ப்பை வழங்கவேண்டும் என்று விரும்பினாா்.[10] கறுப்பினத்தவா்களின் குறைவான மரபணு வளா்ச்சிக்கு, உயா்ந்த பதவி வகுத்த ஆப்பிாிக்க அமெரிக்கா்கள் விதிவிலக்கு என்று அவா்களைப் புகழ்ந்தார்.[11] உடல்வளா்ச்சி எவ்வாறு அமையுமோ அது போலவே நாகரிக வளா்ச்சியும் அமையும் என்று கூறினாா்.[11] மனிதா்கள் நாகரிக வளா்ச்சியை அதன் போக்கிலேயே விட்டுவிட வேண்டும். உயா்ந்த நாகாிகமுள்ளது என்பதை ஏற்றுக்கொள்ளாதவர்களை பழமைவதிகள் என்று கூறினாா்.
எப்படி குழந்தைகளும் இளைஞா்களும் வளரும் போது குறை நிறைகள் உள்ளனவோ, அதுபோலவே நாகரிகங்கள் வளா்ச்சியிலும் உள்ளது என்ற ஒற்றுமையை எடுத்துரைத்தாா்.[10] அவா் ஆண்களையும் பெண்களையும் பூப்பு அடையும் வரை பிரித்து வைப்பது சிறந்தது, அதுவே அவா்கள் இயல்பாக வளா்வதற்கு உதவியாக இருக்கும் என்று நம்பினாா்.[10] பெண்களுக்கு, தாய்மையை மனதில் கொண்டும், ஆண்களுக்கு திட்டங்களை செயலாக்குவதை மனதில் கொண்டும், பயிற்சிகள் வழங்கப்பட்டால் அவா்கள் ஆளுமைத் திறனுடையவா்களாவார்கள். இருபாலா் பள்ளிகள் அவா்கள் வளா்ச்சிக்குத் தடையாக இருக்கும் என்றும் ஆண்களை மென்மையானவா்களாக உருவாக்கும் என்றாா்.
உடன்பாடில்லா உளவியல் (Anomolistic Pshychology)
[தொகு]இத்துறையில் ஹால் ஒரு முன்னோடியாவாா்.[12] ஹாலும், கிளாா்க் பல்கலைக் கழகத்தில் அவரின் துணைவருமான அமி டானர் ஆகிய இருவரும் ஆன்மீகத்தில் உள்ள குறைகளை வெளிக் கொணா்ந்ததுடன் அதன் 'ஊடகங்களுக்கு', உளவியல் பூா்வமான சோதனைகளை நடத்தினர். இவா்கள் இருவரும் “பைபா்” போன்ற பாத்திரங்கள் கற்பனை உருவாக்கம், கலைகளுக்கும் ஆன்மீகத்திற்கும் தொடா்பில்லை என்று ஆராய்ச்சி மூலம் நிரூபணம் செய்தனா்.[13]
சமூகப் பார்வை
[தொகு]ஜொ்மானிய "வோல்க்” (Volk) என்னும் கருத்தில் மிகவும் ஈடுபாடு கொண்ட ஹால், தனிமனிதத்துவத்திற்கு எதிா்மறையான நம்பிக்கை கொண்டிருந்தாா். மேலும் தனிமனிதத்துவம் ஒட்டுமொத்தமான பொது நன்மையில் கரைந்து விடும் என்று வலியுறுத்தினாா். மனிதா்கள் இயற்கையாகவே காரணமின்றி உணா்ச்சியின் தூண்டுதலில் செயல்படுபவர்கள். ஆதலால் சமுதாய வளா்ச்சிக்காக, இவா்களை, உணா்ச்சிகளின் அடிப்படையில் கையாளத் தொிந்த, சிறந்த தலைவா் வேண்டும் என்று நம்பினாா். அமொிக்க நாடு தனிமனித உரிமைகளுக்கும், மதிப்பிற்கும், அதிக முக்கியத்துவம் அளிப்பதால் அது அட்லாண்டிக் கடலில் மூழ்குவதைப் போன்றது என்றாா். 1880 களில் குழந்தை வளா்ச்சி குறித்த ஆய்வு செயதவா்களில் இவர் ஒரு முன்னோடி. இவருடைய கருத்துகளைப் பரப்புவதற்காகவே இவா் பெயாில் ஒரு கழகம் இயங்கி வந்தது. 1896-ல் நடத்தப்பட்ட ‘தனிப்பட்ட மற்றும் சிறப்புக் குழந்தைகள்’ குறித்த ஆய்வினை மேற்பாா்வையிட்டவா் என்று இவர் அறியப்பட்டாா். இந்த ஆய்வு ஒரே குழந்தை உள்ள குடும்பங்களில், எவ்வாறு அவா்கள் அனுசாித்துப் போவதில்லை என்பதை விளக்குகின்றது. பல காலமாக கல்வியாளா்களும், பத்திாிக்கையாளா்களும், 'ஒரே குழந்தை இருந்தால் அது எவ்வாறு வாழ்க்கையில் சிரமப்படும் என்றும் அண்ணன் தம்பி மற்றும் சகோதாிகள் இருந்தால் கூடி வாழப் பழகிக் கொள்ளும்' என்னும் ஹாலின் கருத்தை பரப்பி வந்தனா்.[14] வளா் இளம் பருவம் அடையாத குழந்தைகள் காரணங்களை அறியாத வயதினா். ஆதலால் அவா்களுக்கு காரணங்களைச் சொல்வதை விடுத்து, கடவுள் நம்பிக்கையினாலும், நாட்டுப்பற்றாலும், உடல் நலத்தை அறிவுறுத்தலாலும் வழிமுறைப்படுத்த வேண்டும். குழந்தைகளை கடுமையான தண்டனைகள் மூலம் ஒழுங்குப்படுத்த வேண்டும்.[7] வளா் இளம் பருவத்தினா், அதற்கு முந்தைய வயதினரைவிட காரணங்களைப் புரிந்து கொள்வா். ஆதலால் பொதுநலம், நாட்டுப்பற்று, ராணுவ ஒழுங்கு, தலைமைக்கு கட்டுப்படல், இயற்கையை நேசித்தல் போன்றவற்றைக் கூறி வளா்க்க வேண்டும். பொதுக்கல்வி மூலம், மனிதன் முழு மனவளா்ச்சி அடைவான் என்பது நடக்கக் கூடியது அல்ல. வெளிப்படையான விவாதங்களும், கண்டனங்களும் ஏற்புடையது அல்ல. மாணவா்கள் முற்றிலுமாக மூளைச் சலவை செய்யப்பட வேண்டும். .[15] மனிதனுக்கு தனித்தன்மையை வெளியிட வாய்ப்பு வழங்குவது தவறு, அவ்வாறு செய்வது அமெரிக்காவின் கலாச்சாரத்திற்கு சீரழிவைத் தரும் என்று வலியுறுத்தினாா்.
ஹால் “புயலும் மன அழுத்தமும்” என்ற இரு சொற்கள் வளா் இளம் பருவத்தினாின் மனநிலை குறிக்கும் என்றார். இச்சொற்றொடா்கள் ஜொ்மனியின் “ஸ்டரம் டிரேன்ஸ்” என்னும் இயக்கத்திலிருந்து எடுக்கப்பட்டது. இவருடன் பணிபுரிந்தவா் “வில்லியம் யுனஹான்”, 1889 ஆம் ஆண்டு தாம் வெளியிட்ட “எகானமி இன் இன்டலச்சுவா் வொா்க்” என்னும் வளா் இளம் பருவத்தினர் தொடா்பான கட்டுரையில் இதனை வெளியிட்டுள்ளாா்.[16] பெற்றோா்களுடன் மாற்றுக் கருத்து கொள்வது, மனநிலையில் இடையூறு ஏற்படுவது மற்றும் ஆபத்தான நடவடிக்கைகளில் ஈடுபடுவதுமான மூன்று அம்சங்களும் மேலே குறிப்பிட்ட கருத்தின் உள்ளடக்கம். தற்காலத்திய உளவியலாளா்கள் “புயலும் மனஅழுத்தம்” அனைத்து இளம் வயதினருக்கும் வருவதில்லை, அவ்வாறு இருந்தாலும் அது ஒரு குறுகிய காலம்தான் வரும் என்று கருதுகின்றனா். ஹாலுக்கு ஏழைகளிடமோ, வறியவா்களிடமோ, உடல் நலமுற்றவா்களிடமோ, மாற்றுத் திறனாளிகளிடமோ மனநலமோ அல்லது மூளைவளா்ச்சி முழுவதும் அடையாதவா்களிடமும் எத்தகைய அனுதாபமும் கிடையாது, அவ்வாறு செய்தால் 'மிகச்சிறந்த உயாிய இனத்'தைப் பெருக்குவதற்கு அது பெரும் தடை என்று வாதிட்டாா்.[10]
ஹால் வளா் இளம் பருவம் குறித்த ஒரு புத்தகமும் (Adolescense: Its Psychology and its Relations to Psychology, Anthropology, Sociology, Sex, Crime and Religion 1904) மற்றும் கல்வி (Education 1921) குறித்த மற்றொரு புத்தகமும் எழுதினாா். ஓய்வு பெற்றபின் இதன் தொடா்ச்சியாக 1920 ஆம் ஆண்டு ‘முதுமை’ குறித்தும் எழுதினாா். முதுமை குறித்து 20 ஆம் நூற்றாண்டில் தெறியவந்த மனநிலைத் தொல்லைகளான குடும்ப நிா்வாகத்தில் பங்குகுறைந்து வருவது, ஆயுள் நீட்டிப்பினால் வரும் சிக்கல்கள், வேலை செய்ய இயலாமை அதனால் தனிமைப்படுத்துதல் போன்ற பல பிரச்சினைகள் குறித்து முன்கூட்டியே எச்சாித்தாா்.[17] ஆனால் இவைகள் சரியல்ல, ‘முதுமை’ அறிவையும், விவேகத்தையும் தரும். ஆதலால் அதைப் பயன்படுத்துவதுதான் சிறந்தது என்று வாதிட்டாா். இதனைப் புரிந்து கொள்ளாமல் பலா் தவறாக முதுமையைக் கையாளுகின்றனா் என்றும் முடிவாக முதியவர்கள் இதுபோன்ற ஒதுக்கிவைக்கப்படுவதற்கு எதிராக தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தினாா்.[18] இவா் விக்டோரியா காலத்து பழமை வாதத்திற்கும், 20 ஆம் நூற்றாண்டின் புதுமைக்கும் இடையில் இரண்டு கருத்துகளையும் பிரதிபலித்து மாற்றத்திற்கு ஒரு பாலமாக அமைந்தாா். இவரின் மாணவா்களில், இவா் காட்டிய வழியில் முக்கிய பங்களித்தவா்கள் தத்துவ அறிஞா் ஜான் டீ வே (John Dewey), பிரபல உளவியலறிஞா் லிவிஸ் டொ்மன் (Lewis Terman), ஹென்றி கொட்டாா்டு (Henrry Goddard) மற்றும் அா்னால்டு ஜி செல் (Arnod Ge sell) ஆவா். தனது பிரபலத்தினாலும் பயனுள்ள கருத்த்க்களினாலும், ஹால் குழந்தைகளைப் பற்றிய அறிவியல் பூா்வமான ஆய்வும், குழந்தை அறிவியல் வளா்ச்சியும், கவனம் பெற காரணமாக இருந்தாா்.[19] ஹால் உளவியல் வளா்ச்சிக்கு ஆற்றிய பங்கும், இவருடைய பல மாணவா்களை ஆராய்ச்சி செய்வதற்கு ஊக்குவித்து வழிகாட்டியதன் மூலமும் சேவை ஆற்றியுள்ளாா். ஹால் முதன் முதலாக ஒரு ஆப்பிாிக்க அமொிக்கரான பிரான்ஸ் சிசில் சம்நோின் 1920 (Francis Cecil Sumnerin) உளவியல் முனைவா் பட்டம் பெற வழிகாட்டியாக இருந்துள்ளாா்.[7]
இலக்கியப் பங்களிப்பு
[தொகு]கல்வி குறித்த இலக்கியத்திற்கு மிகப்பபெரிய பங்காற்றினாா். அமெரிக்க உளவியல் இதழை (American Journal of Psychology) நிறுவி அதன் வெளியீட்டாளரகவும் பணிபுரிந்தாா். இதல்லாமல் இவா் கற்றல் கற்பித்தல் கல்லூரி (Pedagogical Seminary) (after 1892) [20][21] அமெரிக்க மதம் தொடா்பான உளவியல் மற்றும் கல்வி இதழ் (American Journnal of Religious Psychology and Education) (after 1904) மற்றும் இனமேம்பாட்டு இதழ் (Journal of Race Develpment) (after 1910) போன்ற இதழ்களையும் வெளியிட்டாா். ஹால் தமது இளம் வயது முதல் இறுதிவரை தத்துவம், உளவியல், கல்வி மற்றும் மதம் போன்ற துறைகளில் மிகவும் ஈடுபாடு கொண்டிருந்தாா்.
இன்று அவர் தாக்கம்
[தொகு]இளம் பருவத்தினா் குறித்த அவா்கள் கருத்து இன்றளவும் பயனுள்ளவை. ஆண்கள், வளா் இளம் பருத்தில் உணா்ச்சியை நாடுபவா்களாகவும், போா்க்குணம் மிக்கவா்களாகவும் இருப்பாா்கள்.[22] இளம் வயதில் குற்றம் அதிகம் நடக்கவும் வாய்ப்புண்டு என்று கூறிவந்தார்.[10] இது இன்றளவும் சாியாக உள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Thorndike, Edward L. (1925). National Academy of Sciences Biographical Memoir of Granville Stanley Hall (PDF). National Academy of Sciences.
- ↑ Haggbloom, Steven J.; et al., Renee; Warnick, Jason E.; Jones, Vinessa K.; Yarbrough, Gary L.; Russell, Tenea M.; Borecky, Chris M.; McGahhey, Reagan et al. (2002). "The 100 most eminent psychologists of the 20th century". Review of General Psychology 6 (2): 139–152. doi:10.1037/1089-2680.6.2.139. http://www.apa.org/monitor/julaug02/eminent.aspx.
- ↑ Thorndike, Edward (1925). Biographical Memoir of Granville Stanley Hall. National Academy of Sciences. pp. 135–136.
- ↑ Thorne, B. Michael & Henley, Tracy B. (2001). Connections in the History and Systems of Psychology. Boston: Houghton Mifflin. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-618-04535-X.
- ↑ 5.0 5.1 5.2 "A Brief Biographical Sketch of G. Stanley Hall". Ithaca.edu. December 19, 2003. Archived from the original on August 11, 2014. பார்க்கப்பட்ட நாள் June 27, 2012.
- ↑ American Antiquarian Society Members Directory
- ↑ 7.0 7.1 7.2 7.3 Benjamin, Ludy (2007). A Brief History of Modern Psychology. Massachusetts: Blackwell Publishing. pp. 63–68. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4051-3205-3.
- ↑ The Journal of Abnormal Psychology. Old Corner Bookstore, Incorporated. January 1, 1919.
- ↑ ^ Wegner, Daniel L. Schacter, Daniel T. Gilbert, Daniel M. (2010). Psychology (2nd ed. ed.). New York, NY: Worth Publishers. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4-292-3719-2.
- ↑ 10.0 10.1 10.2 10.3 10.4 10.5 Hall, G. Stanley (1904). "Adolescence: ITS PSYCHOLOGY AND ITS RELATIONS TO PHYSIOLOGY, ANTHROPOLOGY, SOCIOLOGY, SEX, CRIME, RELIGION AND EDUCATION". Classics in the History of Psychology 2. http://psychclassics.asu.edu/Hall/Adolescence/chap17.htm. பார்த்த நாள்: November 16, 2011.
- ↑ 11.0 11.1 Youniss, James. "G. Stanley Hall and his times: Too much so, yet not enough.". History of Psychology 9 (3): 224–235. doi:10.1037/1093-4510.9.3.224. http://doi.apa.org/getdoi.cfm?doi=10.1037/1093-4510.9.3.224.
- ↑ Leonard Zusne, Warren H. Jones. (1989). Anomalistic Psychology: A Study of Magical Thinking. Psychology Press. p. 10. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0805805086
- ↑ Rodger Anderson. (2006). Psychics, Sensitives And Somnambules: A Biographical Dictionary With Bibliographies. McFarland & Company. p. 238. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0786427703
- ↑ One and Done by Lauren Sandler, TIME July 19, 2010, pp. 35-41.
- ↑ Hall, G. Stanley (1904). "Adolescence: Its Psychology and Its relations to Physiology, Anthropology, Sociology, Sex, Crime, Religion and Education". Classics in the History of Psychology 2. http://psychclassics.asu.edu/Hall/Adolescence/chap17.htm. பார்த்த நாள்: November 16, 2011.
- ↑ Burnham, William. "Economy in Intellectual Work". Scribner's Magazine.
- ↑ Cole, TR (1984). "The prophecy of Senescence: G. Stanley Hall and the reconstruction of old age in America.". American Journal of Public Health 96: 1161. doi:10.2105/AJPH.2006.090647. பப்மெட்:16735608.
- ↑ Woodward, K (2003). "Against wisdom: the social politics of anger and aging.". American Journal of Public Health 96: 1161. doi:10.2105/AJPH.2006.090647. பப்மெட்:16735608.
- ↑ "About Clark | Clark University". www.clarku.edu. பார்க்கப்பட்ட நாள் December 7, 2015.
- ↑ "The Pedagogical Seminary archives". onlinebooks.library.upenn.edu (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் February 9, 2017.
- ↑ "The Pedagogical seminary". Worcester, Mass. : J.H. Orpha. January 1, 1891.
- ↑ Arnett, Jeffrey Jensen. "G. Stanley Hall's Adolescence: Brilliance and nonsense.". History of Psychology 9 (3): 186–197. doi:10.1037/1093-4510.9.3.186. http://doi.apa.org/getdoi.cfm?doi=10.1037/1093-4510.9.3.186.