கிரண் மனிசா மொகந்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிரண் மனிசா மொகந்தி
Kiran Manisha Mohanty
நாடு இந்தியா
பிறப்பு1989 ஏப்ரல் 9
இந்தியா, ஒடிசா, புவனேசுவர்
பட்டம்அனைத்துலக மாசுட்டர் (2006)
பெண் கிராண்டு மாசுட்டர் (2010)
பிடே தரவுகோள்2160
(எண். 557 ஏப்ரல் 2015 இல் தரநிலை பிடே உலகத் தரவரிசை)
உச்சத் தரவுகோள்2316 (ஏப்ரல் 2008)

கிரண் மனிசா மொகந்தி (Kiran Manisha Mohanty) என்பவர் ஓர் இந்திய சதுரங்க விளையாட்டு வீராங்கனை ஆவார்[1]. இவர் 1989 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 09 ஆம் நாள் பிறந்தார். பெண் கிராண்டு மாசுட்டர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. 2006 ஆம் ஆண்டு புது தில்லியில் நடைபெற்ற ஆசிய இளையோர் சதுரங்கப் போட்டியில் மொகந்திக்கு இரண்டாம் இடம் கிடைத்தது[1].

சாதனைகள்[தொகு]

  • 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய இளையோர் சதுரங்கப் போட்டியில் இரண்டாமிடம்
  • ஒடிசாவின் முதல் பெண் அனைத்துலக மாசுட்டர் (2006), தேசிய பி பெண்கள் சாம்பியன் பட்டம் (2007), பெண் கிராண்டு மாசுட்டர் (2010) முதலிய பெருமைகள் இவருடைய சாதனைகளாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Kiran, Manisha Mohanty FIDE Chess Profile – Players Arbiters Trainers. Ratings.fide.com (24 April 2010). Retrieved on 2017-04-14.

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரண்_மனிசா_மொகந்தி&oldid=3434758" இலிருந்து மீள்விக்கப்பட்டது