உள்ளடக்கத்துக்குச் செல்

கிரண் மசும்தார் சா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிரன் மசும்தார் சா
கிரன் மசும்தார் சா, 2014
பிறப்பு23 மார்ச்சு 1953 (1953-03-23) (அகவை 71)
பெங்களூரு, இந்தியா
இருப்பிடம்பெங்களூரு, இந்தியா
பணிதலைவர், பயோகான்
சொத்து மதிப்புUS$655 மில்லியன் (அக்டோபர் 2013 நிலவரப்படி)
சமயம்இந்து
வாழ்க்கைத்
துணை
ஜான் ஷா[1]

கிரண் மசூம்தார்-சா (Kiran Mazumdar-Shaw) இந்தியாவைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர் ஆவார்.[2] 1953 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 23 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். இந்தியாவின் கருநாடக மாநிலம் பெங்களூரை தலைமையிடமாகக் கொண்ட உயிரியல் மருத்துவ தயாரிப்பு நிறுவனமான பயோகான் நிறுவனம்[3] மற்றும் பயோகான் உயிரியல் நிறுவனம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைவரும் நிறுவனருமாவார்.[4] பெங்களூருவில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தின் முன்னாள் தலைவராகவும் கிரண் மசூம்தார்-சா அறியப்படுகிறார்.[5] அறிவியல் மற்றும் வேதியியலின் முன்னேற்றத்திற்கான சிறந்த பங்களிப்புகளுக்காக 2014 ஆம் ஆண்டில் இவருக்கு ஓத்மர் தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது.[6][7][8][9][10] அவர் பைனான்சியல் டைம்சு என்ற ஆங்கில நாளிதழ் 2011 ஆம் ஆண்டு வெளியிட்ட சிறந்த வணிகர்கள் பட்டியலில் முதல் 50 பெண்களில் இவர் இடம்பெற்றிருந்தார். 2019 ஆம் ஆண்டில், போர்ப்சு பத்திரிகையும் உலகின் 68 ஆவது சக்திவாய்ந்த பெண்மணியாக இவரை பட்டியலிட்டது.[11] 2020 ஆம் ஆண்டில் உலக தொழில்முனைவோராகவும் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[12]

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]

கிரண் மசூம்தார்-சா 1953 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 23 ஆம் நாளன்று [13] கர்நாடகா மாநிலம் பெங்களூரில் குசராத்தி பெற்றோருக்கு மகளாகப் பிறந்தார்.[14] பெங்களூரின் பிசப் காட்டன் மகளிர் உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றார், 1968 ஆம் ஆண்டில் பட்டம் பெற்றார். பின்னர் பெங்களூரு மவுண்ட் கார்மல் கல்லூரியில் பயின்றார். இது பெங்களூரு பல்கலைக்கழகத்தின் துணை நிறுவனமாக பல்கலைக்கழகத்திற்கு முந்தைய படிப்புகளை வழங்கும் ஒரு மகளிர் கல்லூரியாகும். கிரண் மசூம்தார்-சா உயிரியல் மற்றும் விலங்கியல் பாடங்களைப் படித்தார்.[15] பெங்களூரு பல்கலைக்கழகத்தில் 1973 ஆம் ஆண்டில் விலங்கியல் இளங்கலைப் பட்டம் பெற்றார்.[16] மருத்துவப் பள்ளிக்குச் செல்ல எண்ணியிருந்த இவரால் உதவித்தொகையைப் பெற முடியவில்லை.[17]

மேற்கோள்கள்[தொகு]

 1. "How Biocon's Kiran Mazumdar-Shaw battled cancer plaguing her husband & best friend - The Economic Times". Economictimes.indiatimes.com. 2014-04-24. பார்க்கப்பட்ட நாள் 2014-08-03.
 2. Srikar Muthyala (29 September 2015). "The List of Great Entrepreneurs of India in 2015". MyBTechLife. Archived from the original on 14 January 2016.
 3. "Kiran Mazumdar Shaw - Executive Chairperson". Biocon (in அமெரிக்க ஆங்கிலம்). 11 May 2020. பார்க்கப்பட்ட நாள் 2021-06-16.
 4. "Start-up stories: Kiran Mazumdar-Shaw". BBC News. 11 April 2011. https://www.bbc.co.uk/news/business-13036670. 
 5. "Kiran Mazumdar-Shaw replaces Mukesh Ambani as IIM Bangalore chairperson". Financial Express. 19 February 2014. பார்க்கப்பட்ட நாள் 3 August 2014.
 6. "Othmer Gold Medal". Science History Institute. பார்க்கப்பட்ட நாள் 12 June 2014.
 7. "Dr Kiran Mazumdar first Indian to receive 'Othmer Gold Medal 2014'". BioSpectrum. 16 May 2014 இம் மூலத்தில் இருந்து 19 May 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140519194020/http://www.biospectrumasia.com/biospectrum/news/214825/dr-kiran-mazumdar-indian-receive-othmer-gold-medal-2014. 
 8. Laranang-Mutlu, Theresa (16 May 2014). "USP Congratulates Kiran Mazumdar-Shaw, Recipient of 2014 Othmer Gold Medal". U.S. Pharmacopeial Convention இம் மூலத்தில் இருந்து 2 June 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140602154615/http://www.usp.org/news/usp-congratulates-kiran-mazumdar-shaw-recipient-2014-othmer-gold-medal. 
 9. "Biocon chief Kiran Mazumdar-Shaw receives Othmer Gold Medal 2014". The Economic Times. 19 May 2014. http://articles.economictimes.indiatimes.com/2014-05-19/news/49948890_1_kiran-mazumdar-shaw-chemical-heritage-foundation-outstanding-activity. 
 10. Gussman, Neil (19 May 2014). "CHF Presents Awards to Innovators from Around the World at Heritage Day 2014". MarketWatch: The Wall Street Journal. http://www.marketwatch.com/story/chf-presents-awards-to-innovators-from-around-the-world-at-heritage-day-2014-2014-05-19. 
 11. "World's Most Powerful Women". Forbes. பார்க்கப்பட்ட நாள் 13 December 2019.
 12. Avik Das (6 Jun 2020). "Kiran Mazumdar-Shaw wins EY World Entrepreneur award - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-03-23.
 13. "Kiran Mazumdar-Shaw | Biography & Facts". Encyclopedia Britannica (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-01-29.
 14. "Bengal too 'safe' for start-ups". பார்க்கப்பட்ட நாள் 2020-12-21.
 15. "Dr. Kiran Mazumdar Shaw - Who Am I ? By Meet Kamani". sites.google.com. பார்க்கப்பட்ட நாள் 2020-05-20.
 16. Manjunath, V.S.; Nagendra, S. (2010). Entrepreneurship and Management. India: Pearson Education. p. 154. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788131732502. பார்க்கப்பட்ட நாள் 16 September 2014.
 17. "Kiran Mazumdar-Shaw". Science History Institute. 29 June 2016. பார்க்கப்பட்ட நாள் 20 March 2018.

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரண்_மசும்தார்_சா&oldid=3945801" இலிருந்து மீள்விக்கப்பட்டது