கியனுத்ரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கியனுத்ரித் தீவு

கியனுத்ரி (Giannutri) என்பது அமைந்துள்ள தசுக்கன் தீவுக்கூட்டத்தில், தசுக்கனி எனும் இத்தாலியப் பிராந்தியத்தின் கரையில் அமைந்துள்ள தீவு ஆகும். தசுக்கன் தீவுக்கூட்டத்தில் அமைந்துள்ள முக்கிய ஏழு தீவுகளில் இதுவும் ஒன்றாகும். அத்துடன் இத்தீவே அவற்றுள் மிகச்சிறியது ஆகும். இதன் மொத்த நிலப்பரப்பளவு 2.6 சதுர கிலோமீற்றர்கள் ஆகும். இத்தீவின் அதிகூடிய உயரம் 88 மீற்றர்கள் ஆகும். இங்கு 2011 ஆம் ஆண்டின் சனத்தொகைக் கணக்கெடுப்பிற்கு அமைய 27 பேர் வாழ்ந்து வருகின்றனர். இங்கு பன்னங்கள், ஒர்க்கிட்டுகள் வளர்வதற்கு ஏற்ற காலநிலை நிலவுகின்றது. [1] அத்துடன் இத்தீவின் கரைக்கடற் பிரதேசங்களில் கறுப்பு முருகைக்கற்கள், சிவப்ப்பு முருகைகற்கள் காணப்படுகின்றன.[2] இத்தீவுல் அவுடோனியனின் நீள் சிறகுக்கடற் பறவை அதிகமாகக் காணப்படுகின்றது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Isola di Giannutri Giardini & ambiente
  2. "Ucina". 2016-11-12 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2017-01-04 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Itinerari in Toscana". 2016-03-04 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2017-01-04 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கியனுத்ரி&oldid=3696341" இருந்து மீள்விக்கப்பட்டது