உள்ளடக்கத்துக்குச் செல்

கிம் சூகியுன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிம் சூகியுன்
பிறப்பு16 பெப்ரவரி 1988 (1988-02-16) (அகவை 36)
சியோல்
தென் கொரியா
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2007–இன்று வரை
உயரம்1.80 m (5 அடி 11 அங்)
வலைத்தளம்
http://soo-hyun.com/

கிம் சூகியுன் (ஆங்கில மொழி: Kim Soo-hyun, 김수현) (பிறப்பு: 16 பெப்ரவரி 1988) என்பவர் ஒரு தென் கொரியா நாட்டு நடிகர் ஆவார். இவர் தென் கொரியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவர்,[1] அத்துடன் இவரின் நடிப்புத்திறனுக்காக நான்கு பேக்சாங் கலை விருதுகள், இரண்டு கிராண்ட் பெல் விருதுகள் மற்றும் ஒரு புளூ டிராகன் திரைப்பட விருது போன்றவற்றை வென்றுள்ளார்.

இவர் 2012 முதல் 2016 வரை மற்றும் 2021 இல், அவர் 'போர்ப்சு கொரியா பிரபல நட்சத்திரங்கள் 40' என்ற பட்டியலில் தேர்வு செய்யப்பட்டார்.[2] அத்துடன் இவர் 2014 ஆம் ஆண்டில் கேலப் கொரியாவின் ஆண்டின் சிறந்த தொலைக்காட்சி நடிகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் மற்றும் போர்ப்ஸ் நாளிதழ் அவர்களின் 2016 ஆம் ஆண்டின் 30 வயதுக்குட்பட்ட 30 ஆசியா பிரபலங்களின் பட்டியலில் இவர் இடம்பெற்றுள்ளார்.[3][4]

ஆரம்ப கால வாழ்க்கை

[தொகு]

இவர் 16 பெப்ரவரி 1988 ஆம் ஆண்டு, தென் கொரியாவில் சியோலில் பிறந்தார். இவரின் தந்தை கிம் சுங்-ஹூன், 80களின் இசைக்குழு "செவன் டால்பின்ஸ்" இன் முன்னணி பாடகர் ஆவார்.[5] கிம்மின் தாயார், இவரது கூச்சம் மற்றும் உள்முக ஆளுமையைக் கடக்க உதவுவதற்காக, இவரது பள்ளிப் பருவத்தில் நடிப்பு வகுப்புகளை எடுக்க அவரை ஊக்குவித்தார்.[6]

இவர் தான் ஒரு நடிகராக வேண்டும் என்ற விருப்பம் உண்மையில் அவரது நடுநிலைப் பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளிக்கு இடையில் தொடங்கியது. இவர் 2006 வாக்கில், தனது ஆரம்ப, நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளியை கங்னாம், சியோலில் முடித்தார் மற்றும் நேர்முகத்தேர்வுக்கு பிறகு 2007 இல் தொலைக்காட்சி நடிகராக அறிமுகமானார். இவர் 2009 இல் சுங்-ஆங் பல்கலைக்கழகத்தின் திரைப்படம் மற்றும் நாடகத் துறையில் சேர்ந்து பட்டம் பெற்றார்.

தொழில்

[தொகு]
மே 2015 இல் 'தி புரொட்யூசர்' தொடரின் பத்திரிகையாளர் சந்திப்பில் கிம்

கிம் தனது பள்ளி ஆண்டுகளில் தனது உள்முக ஆளுமையை முறியடிக்க அவரது தாயின் பரிந்துரையின் பேரில் நடிப்பு வகுப்புகளை எடுத்தார். பின்பு ஒரு சில நாடகப் படைப்புகளைத் தொடர்ந்து, 2007 ஆம் ஆண்டில் 'கிம்ச்சி சீஸ் ஸ்மைல்' என்ற குடும்ப நகைச்சுவை தொடரில் மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமானார்.[7]

அதை தொடர்ந்து டிரீம் ஹை (2011),[8] மூண் எம்பிரசிங் தி சன் (2012)[9] ஆகிய தொலைக்காட்சி நாடகங்களிலும், தி தீவ்ஸ் (2012) மற்றும் சீக்ரெட்லி, கிரேட்லி (2013) ஆகிய அதிக வசூல் செய்த திரைப்படங்களிலும் நடித்ததன் மூலம் இவர் தன்னை ஒரு சிறந்த நடிகராக நிலைநிறுத்திக் கொண்டார். அத்துடன் மூண் எம்பிரசிங் தி சன் தொடரில் இவரது நடிப்பு அவருக்கு சிறந்த நடிகருக்கான பேக்சாங் கலை விருதில், தொலைக்காட்சிக்கான விருதை வென்றார்.

இவர் 2013 ஆம் ஆண்டில் மை லவ் ஃப்ரம் த ஸ்டார் என்ற கற்பனைக் காதல் நகைச்சுவை தொடரிலும் மற்றும் தி புரொட்யூசர்ஸ் (2015) என்ற தொடரிலும் நடித்துள்ளார். இந்த தொடர்கள் மேலும் வெற்றியைப் பெற்றதால் கிம் ஒரு சிறந்த பிரபல கொரியன் நட்சத்திரமாக ஆனார். பின்னர் 2017 ஆம் ஆண்டு வெளியான 'ரீல்' என்ற திரைப்படம் வசூல் ரீதியாக தோல்வியைத் தொடர்ந்து, அவர் தனது கட்டாய இராணுவ சேவையை இணைந்து, 2019 ஆம் ஆண்டு தனது 2 வருட சேவையில் இருந்து விடுதலை அடைந்தார்.

அதன் பின்னர் 2020 ஆம் ஆண்டில் 'இட்ஸ் ஓகே டு நாட் பி ஓகே' என்ற தொடரிலும், மற்றும் 2021 ஆம் ஆண்டில் திரில்லர் தொடரான 'ஒன் ஆர்டினரி டே' ஆகியவற்றுடன் அவர் மீண்டும் நடிக்கத் தொடங்கினார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Jam Nitura (July 2, 2020). "So, Just How Rich Is Kim Soo Hyun, The Highest Paid Korean Actor Of 2020?". MSN. Cosmopolitan. Archived from the original on October 17, 2020. பார்க்கப்பட்ட நாள் October 16, 2020.
  2. Ed Slott (August 25, 2013). "Forbes Korea Power Celebrity 2013". Forbes. Archived from the original on June 12, 2020. பார்க்கப்பட்ட நாள் February 27, 2017.
    Choi, Eun-gyeong; Lim, Chae - yeon (February 23, 2015). [창간특집 IV] 2015 KOREA POWER CELEBRITY 40 - 엑소, 한국 최고의 파워 셀러브리티 [[First Publication IV] 2015 KOREA POWER CELEBRITY 40-EXO, Korea's best power celebrity]. JoongAng Ilbo (in கொரியன்). Archived from the original on May 8, 2020. பார்க்கப்பட்ட நாள் February 27, 2017.
    Jo, Deuk-jin (February 25, 2016). 1위 지킨 엑소, 단숨에 정상권 오른 유아인·혜리 [#1 Guardian EXO, Yoo-in and Hye-ri, rise to the top at once]. JoongAng Ilbo (in கொரியன்). Archived from the original on May 11, 2020. பார்க்கப்பட்ட நாள் February 27, 2017.
  3. Jung A-ran (December 22, 2014) (in ko) இம் மூலத்தில் இருந்து January 17, 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230117034738/https://www.yna.co.kr/view/AKR20141222125200005. 
  4. Howard, Caroline (February 24, 2016). "G.E.M., Angelababy, Soo-hyun Kim And The Actors And Athletes Of 30 Under 30 Asia". Forbes இம் மூலத்தில் இருந்து July 11, 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180711231502/https://www.forbes.com/sites/carolinehoward/2016/02/24/g-e-m-angelababy-soo-hyun-kim-and-the-actors-and-athletes-of-30-under-30-asia/. 
  5. Lee, Seungrok (February 13, 2012). 김수현, 아버지 알고보니 세븐돌핀스 김충훈 '새삼 화제' [Kim Soo-hyun, father turned out to be Seven Dolphins Kim Choong-hoon 'New Topic']. Naver. My Daily. Archived from the original on September 8, 2017. பார்க்கப்பட்ட நாள் September 28, 2020.
  6. Chiu, Melody (July 31, 2015). "Four Things to Know About Korean Heartthrob Kim Soo Hyun". people.com. People. Archived from the original on January 29, 2018. பார்க்கப்பட்ட நாள் September 28, 2020.
  7. Jang, Young-jun (March 18, 2012). 김수현 "데뷔작 '김치치즈스마일', 헤어스타일 덕에 캐스팅" [Kim Soo-hyun "Debut work, 'Kimchi Cheese Smile' casting thanks to hairstyle"]. Naver (in கொரியன்). TV Report. Archived from the original on June 14, 2020.
  8. Hong, Lucia (November 1, 2010). "Kim Soo-hyun cast as male lead in upcoming KBS drama". 10Asia. Archived from the original on July 11, 2018.
    Lee, Jiyoung (March 1, 2011). 김수현, '드림하이' 통해 '유망주'에서 '스타'로...차기작 러브콜 쇄도 [Kim Soo-hyun, from 'promising' to 'star' through 'Dream High'...]. Naver (in கொரியன்). OSEN. Archived from the original on January 17, 2023. பார்க்கப்பட்ட நாள் September 28, 2020.
  9. Kim, Jessica (November 1, 2011). "Kim Soo-hyun to turn king in new series". 10Asia. Archived from the original on July 18, 2020.
    Lee, Jin-ho (November 11, 2011). "Kim Soo Hyun Cast in The Sun and the Moon". enewsWorld இம் மூலத்தில் இருந்து February 2, 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150202133810/http://mwave.interest.me/enewsworld/en/article/1502/kim-soo-hyun-cast-in-the-sun-and-the-moon. 

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிம்_சூகியுன்&oldid=3866229" இலிருந்து மீள்விக்கப்பட்டது