கிஜூபாய் பதேக்கா
கிரிஜாசங்கர் பக்வான்ஜி பதேக்கா | |
|---|---|
| பிறப்பு | 15 நவம்பர் 1885 சித்தல், பிரித்தானிய இந்தியா |
| இறப்பு | 23 சூன் 1939 (அகவை 53) பவநகர், குசராத்து, இந்தியா |
| மற்ற பெயர்கள் | “மீசை உள்ள அம்மா” |
| அறியப்படுவது | கல்வி, சீர்திருத்தம், சிறுவர் கல்வி |
| வலைத்தளம் | |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | |
கிஜூபாய் பதேக்கா (Gijubhai Badheka, 15 நவம்பர் 1885 – 23 சூன் 1939) சித்தல் நகரில் பிறந்த இவர், இந்தியாவில் மாண்டிசோரிக் கல்வி முறையை[1] அறிமுகப்படுத்துவதில் பெரும் பங்கு வகித்தார். இவர் “மீசை உள்ள அம்மா” எனவும் அறியப்படுகிறார். முதலில் இவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். 1923 – இல் இவருடைய மகன் பிறந்த பிறகு, இவர் குழந்தை வளர்ச்சி மற்றும் கல்வியில் தனது ஆர்வத்தைச் செலுத்தினார். 1920-இல் பதேகா “ பால மந்திர்” என்னும் முன் தொடக்கப் பள்ளியை [2] நிறுவினார். “பகல் கனவு“ போன்ற பல கல்விசார் நூல்களை வெளியிட்டுள்ளார்.
வாழ்க்கை
[தொகு]பதேகா, மேற்கு இந்தியாவின் செளராஷ்டிரா பகுதியில் பிறந்தவர். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் “ கிரிஜாசங்கர் “. குசராத்தில் உள்ள பவநகர் பகுதியில் வளர்ந்தார். 1907 –இல் கிழக்கு ஆப்பிரிக்காவிற்குச் சென்ற இவர், பின் மும்பையில் தனது பணியைத் தொடர்ந்தார். 1939, சூன் 23 அன்று இயற்கை எய்தினார்.
கல்விக்கான பங்களிப்புகள்
[தொகு]1920 –இல் பால மந்திர் மழலையர் பள்ளியைத் தொடங்கினார். பிறகு நானாபாய்பட், ஹர்பால் திரிவேதி, பதேகா ஆகியோர் சேர்ந்து “ ஸ்ரீ தட்சிணாமூர்த்தி ஜிஜூபாய் வினய் மந்திர் “ என்னும் பள்ளியை பவநகரில் நிறுவினர்.
வெளியீடுகள்
[தொகு]பதேகா கதைப்புத்தகங்கள் உட்பட 200 நூல்களை வெளியிட்டுள்ளார். அவை அனைத்தும் குழந்தைக் கல்வி, பயணம், நகைச்சுவை இவைகளை மையப்படுத்தியே இருந்தன. அவருடைய புத்தகங்கள் குழந்தைகள், பெற்றோர், கல்வியாளர்களைப் பெரிதும் கவர்ந்தன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Goli (30 May 2010). "Gijubhai Badheka: An inspiring teacher though Montessori". NGOpost.org. NGOpost.org. Archived from the original (Web page) on 11 ஏப்ரல் 2012. Retrieved 30 March 2012.
- ↑ Mamata Pandya. "Gijubhai on Education". Learning Network Initiative. The Learning Network. Archived from the original (Web page) on 27 செப்டெம்பர் 2013. Retrieved 30 March 2012.