பகல் கனவு (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பகல் கனவு
நூலாசிரியர்கிஜூபாய் பதேக்கா (குஜராத்தி)
தமிழாக்கம்: : டாக்டர் சங்கரராஜுலு, ஆனந்தம் கிருஷ்ணமூர்த்தி
நாடுஇந்தியா
மொழிமூலம்: குஜராத்தி, மொழிபெயர்ப்பு: தமிழ்
வெளியீட்டாளர்நேஷனல் புக் டிரஸ்ட்
வெளியிடப்பட்ட நாள்
1932 (குஜராத்தி), 2005 (தமிழாக்கம்)
ஊடக வகைஅச்சு நூல்
பக்கங்கள்109
ISBN978-81-237-3118-6
இந்த நூல் கல்வியியலில் ஏற்படவேண்டிய மாற்றங்களை விவாதித்துள்ளது.

பகல் கனவு (Divaswapna)[1] என்பது நேஷனல் புக் டிரஸ்ட்டால் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்ட நூல் ஆகும்.

நூல் அறிமுகம்[தொகு]

பகல் கனவு என்ற நூல் 1931-இல் கிஜூபாய் பதேக்கா என்பவரால் குஜராத்தி மொழியில் எழுதப்பட்டது. இவர் காலனிய இந்தியாவில் மான்டேசொரி கல்வி முறையினை[2] முதலில் தொடங்கினார். தொடக்கப்பள்ளி ஆசிரியரான இவர் தனது வகுப்பறையில் கல்வியை மாணவர்களுக்கு எளிதாக்க மேற்கொண்ட மாற்றங்களைப் பகிர்ந்துள்ளார்.

நூல் விவரங்கள்[தொகு]

புரிதல் இன்றி மனப்பாடம் செய்து ஒரு மாணவர் அதிக மதிப்பெண் பெற்றால், அவர் எப்படி சிறந்தவராக இருக்க முடியும்? புரிந்து கொள்ள கூடிய வகையில் எளிதான முறையில் கற்று கொடுத்தால் என்ன என்பதற்கான விடையைக் கண்டறிந்த கிஜூபாய் பதேக்கா, பாடக் கருத்துகளை கதைகள் வழியாக கற்றுத்தரும் உத்திகளைக் கண்டறிந்து அளித்துள்ளார். இவரது முயற்சியை சக ஆசிரியர்களும், நிர்வாகமும் கேலி செய்த போதும் தனது விடாமுயற்சியினால் வெற்றி கண்டார். இப்பரிசோதனையில் அவர் பெற்ற அனுபவங்கள், போராட்டங்கள், வெற்றி தோல்விகளை பகல் கனவு என்னும் இந்நூல் விவரிக்கின்றது.

சான்றுகள்[தொகு]

  1. நூல் உலகம் இணையத்தில் நூலறிமுகம்
  2. Goli (30 May 2010). "Gijubhai Badheka: An inspiring teacher though Montessori". NGOpost.org. NGOpost.org. Archived from the original (Web page) on 11 ஏப்ரல் 2012. பார்க்கப்பட்ட நாள் 30 March 2012. {{cite web}}: Check date values in: |archivedate= (help)

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பகல்_கனவு_(நூல்)&oldid=3728103" இலிருந்து மீள்விக்கப்பட்டது