உள்ளடக்கத்துக்குச் செல்

கிங்சாங்கைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிங்சாங்கைட்டு
Qingsongite
படிகக் கட்டமைப்பு
பொதுவானாவை
வகைதாயகத் தனிமக் கனிமம் : நைட்ரைடுகள்
வேதி வாய்பாடுBN
இனங்காணல்
படிக இயல்புகுரோமியம் அதிகமுள்ள பாறைகளில் ஊடுறுவியுள்ளது
படிக அமைப்புகனசதுரப் படிகம்
பிற சிறப்பியல்புகள்கதிரியக்கம் இல்லை, காந்தப் பண்பு இல்லை
மேற்கோள்கள்[1]

கிங்சாங்கைட்டு (Qingsongite) என்பது BN என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் அடையாளப்படுத்தப்படும் ஒரு கனிமமாகும். கனசதுரப் படிக வடிவத்துடன் கூடிய அரிய போரான் நைட்ரைடு கனிமமாக இது கருதப்படுகிறது. சீனாவின் திபெத் தன்னாட்சிப் பகுதியான சானன் மாகணத்தில் உள்ள லூபுசா ஓபியோலைட்டின் குரோமைட்டு படிவுகளுக்குள் நுண் சேர்க்கையாக 2009 ஆம் ஆண்டில் இது முதலில் கண்டறியப்பட்டது.[1] 2013 ஆம் ஆண்டு ஆகத்து மாதத்தில் பன்னாட்டு கனிமவியல் சங்கத்தால் கனிமமாக அங்கீகரிக்கப்பட்டது. சீன புவியியலாளர் கிங்சாங் ஃபாங் (1939-2010) நினைவாக கிங்சாங்கைட்டு எனப் பெயரிடப்பட்டது.[1] இக்கனிமம் பூமியின் மேலடுக்கில் ஆழமாக உருவாகும் ஒரே அறியப்பட்ட போரான் கனிமமாகும்.[2] ஆசுபோர்னைட்டு (தைட்டானியம் நைட்ரைடு), கோசைட்டு, கயனைட்டு மற்றும் உருவமற்ற கார்பன் ஆகியவை இதனுடன் தொடர்புடைய கனிமங்களில் அடங்கும்.[3]

பன்னாட்டு கனிமவியல் சங்கம் கிங்சாங்கைட்டு கனிமத்தை Qsg[4] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 Qingsongite on Mindat.org
  2. Qingsongite: New Mineral from Tibet Hard as Diamond. sciencenews.org. August 5, 2013
  3. "Pittalwala, Iqbal, International Research Team Discovers New Mineral, UCR Today, Aug. 2, 2013". Archived from the original on 2013-08-06. பார்க்கப்பட்ட நாள் 2014-03-24.
  4. Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிங்சாங்கைட்டு&oldid=4154338" இலிருந்து மீள்விக்கப்பட்டது