காளான் பாறைகள்
காளான் பாறைகள் அல்லது பீடப்பாறைகள் (Pedestal Rock அல்லது Mushroom Rock) என்று அழைக்கப்படுவது ஒருவகை இயற்கைப் பாறை அமைப்பாகும். இதன் பெயருக்கு ஏற்ப இப்பாறை காளானை ஒத்து இருக்கும். கடின மற்றும் மென்மையான அடுக்குகளால் ஆன பாறையானது காற்றினால் கடத்தி கொண்டு வரப்படும் மணல் துகள்களினால் தாக்கப்படுகின்றது. அப்போது மென் அடுக்குகளானது கீழ் பகுதியில் இருப்பின் மேலே உள்ள கடின அடுக்கினை விட வேகமாக அரிக்கப்படுகிறது. இவ்வாறான நீண்டகால அரிப்பினால் பாறைத்தூணானது தரையை ஒட்டி மட்டும் அரிப்புக்கு ஆளாகி மேற்புரம் விரிந்த நிலையில் காளான் போன்று தோற்றமளிப்பதால் இப்பெயர் பெற்றன. இவ்வாறான பாறைகள் பீடப்பாறைகள் எனவும் அழைக்கப்படுகிறது. [1] காளான் பாறைகள் யார்டாங் பாறைகளுடன் உறவு உடையவை என்றாலும் வேறுபட்டவை.[2]
தமிழ்நாட்டில் காளான் பாறைகள்
[தொகு]இந்தியாவில் இவ்வகைப் பாறைகள் தார் பாலைவனப்பகுதியில் கண்டறியப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் எல்லையில்திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டம், கந்திலியை அடுத்த தோக்கியம் கிராமத்தில், கதிரியப்பன் கோயில் வட்டம் என்னும் இடத்தில் காளான் பாறைகள் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ தமிழ்நாடு பாட நூல் கழகம், சென்னை-6, பதிப்பு 2013, ஏழாம் வகுப்பு, முதல் பருவம், தொகுதி 2, பக்கம் 267
- ↑ The Facts on File. Earth Science Handbook
- ↑ "தென் இந்தியாவில் முதல் முறையாககிருஷ்ணகிரி மாவட்ட எல்லையில் காளான் பாறைகள் கண்டுபிடிப்பு". செய்தி. தினமணி. 1 அக்டோபர் 2017. பார்க்கப்பட்ட நாள் 2 அக்டோபர் 2017.