உள்ளடக்கத்துக்குச் செல்

கால்சியம் செலீனைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கால்சியம் செலீனைடு
Calcium selenide
இனங்காட்டிகள்
1305-84-6 Y
பப்கெம் 102107
UNII P0EY54309M Y
பண்புகள்
CaSe
வாய்ப்பாட்டு எடை 119.038 கி/மோல்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

கால்சியம் செலீனைடு (Calcium selenide ) CaSe என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படுகிறது. கால்சியமும் செலீனியமும் சம அளவு வேதிவினைக் கூறுகள் விகிதத்தில் இவ்வேதிச் சேர்மத்தில் சேர்ந்துள்ளன.

தயாரிப்பும் பண்புகளும்

[தொகு]

நீர்ம அமோனியாவில் கால்சியமும் ஐதரசன் செலீனைடும் வினைபுரிந்து கால்சியம் செலீனைடு உருவாகிறது.[1]

Ca + H2Se = CaSe + H2

உயர் வெப்பநிலையில் வெற்றிடச் சூழலில் இண்டியம்(III) செலீனைடுடன் வினைபுரியும் கால்சியம் செலீனைடு CaIn2Se4 என்ற படிகக் கட்டமைப்பு சேர்மத்தை தருகிறது. [2]

CaSe + In2Se3 = CaIn2Se4

மேற்கோள்கள்

[தொகு]
  1. Kohle, J.; Petzel, T. The preparation of calcium selenide, strontium selenide, barium selenide, and europium(II) selenide by the reaction of the metals with hydrogen selenide in liquid ammonia. Zeitschrift fuer Anorganische und Allgemeine Chemie, 1977. Vol 437: 193-196.
  2. Yagubov, N. I.; Guliev, T. N.; Rustamov, P. G.; Chiragov, M. I.; Safarov, V. G. Preparation and study of the properties of calcium indium selenide, CaIn2Se4. Zhurnal Neorganicheskoi Khimii, 1988. 33 (6): 1387-1389.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கால்சியம்_செலீனைடு&oldid=4154903" இலிருந்து மீள்விக்கப்பட்டது