கால்குலேட்டர் (விண்டோசு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கால்குலேட்டர் (விண்டோசு)

மைக்ரோசாப்ட் விண்டோசின் ஒரு பாகம்.
விண்டோசு 7இல் கால்குலேட்டர்
Details
வகைகணித்தல் மென்பொருள்
சேர்த்திருக்கும்
இயங்கு தளங்கள்
மைக்குரோசாபுட்டு விண்டோசுப் பதிப்புகள் அனைத்தும்

கால்குலேட்டர் அல்லது விண்டோசுக் கால்குலேட்டர் (Calculator) என்பது மைக்குரோசாபுட்டு விண்டோசு இயங்குதளப் பதிப்புகள் அனைத்திலும் உள்ளடக்கப்பட்ட கணித்தல் மென்பொருள் ஆகும்.[1] பெரும்பாலான விண்டோசு முறைமைகளில் calc என்ற கட்டளையின் மூலம் கால்குலேட்டரைச் செயற்படுத்தலாம்.[2]

வரலாறு[தொகு]

கால்குலேட்டரானது முதன்முதலில் விண்டோசு 1.0உடன் எளிய எண்கணிதக் கணிப்பானாக அறிமுகப்படுத்தப்பட்டது.[3]

பின்னர், விண்டோசு 3.0இல் கால்குலேட்டரில் அறிவியலியல் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. விண்டோசு 3.0இலும் விண்டோசு 3.1எக்சிலும் கால்குலேட்டரானது வெள்ளைப் பின்னணியுடன் ஈரளவு ஆளிகளையும் கொண்ட இடைமுகத்தைக் கொண்டிருந்தது.[4]

பின்னர், விண்டோசு 2000இல் இலக்கங்களைக் குழுவாக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

விண்டோசு 7[தொகு]

விண்டோசு 7இல் நிரலாக்குநர் முறை
விண்டோசு 7இல் அறிவியலியல் முறை

விண்டோசு 7இல் கால்குலேட்டரில் நிரலாக்குநர், புள்ளிவிவரங்கள், அலகு மாற்றம், தேதி கணக்கீடு, பணித்தாள்கள் ஆகிய முறைகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.[5]

அத்துடன், நிரலாக்குநரைத் தவிர்ந்த எந்தவொரு எந்தவொரு முறையிலும் கணித்தல் வரலாற்றைப் பார்க்கக்கூடியதாகவுள்ளது.[6] மேலும் பல்தொடுகை முறையையும் விண்டோசு 7இலிருந்து கால்குலேட்டர் ஏற்கின்றது.[7] இக்கால்குலேட்டரில் நிலையான முறையானது எளிய கணிப்பானைப் போல் 6 * 4 + 12 / 4 - 4 * 5 என்று உள்ளிட்டால் 25 என்னும் பெறுமானத்தையே வருவிளைவாகத் தருகின்றது. ஆனால், அறிவியலியல் முறையோ அறிவியலியற்கணிப்பானைப் போன்று, 6 * 4 + 12 / 4 - 4 * 5 என்று உள்ளிட்டால் 7 என்னும் பெறுமானத்தையே வருவிளைவாகத் தருகின்றது.

மேற்கோள்கள்[தொகு]

  1. விண்டோசு 7இல் கால்குலேட்டரைப் பயன்படுத்துதல் (ஆங்கில மொழியில்)
  2. தொடங்கு-இயக்கு கோடு (ஆங்கில மொழியில்)
  3. விண்டோசு 1.0-கால்குலேட்டர் (ஆங்கில மொழியில்)
  4. விண்டோசு 3.0 (ஆங்கில மொழியில்)
  5. ["எரிபொருள் செலவைக் கணக்கிடவும் (ஆங்கில மொழியில்)". Archived from the original on 2009-06-06. பார்க்கப்பட்ட நாள் 2012-08-22. எரிபொருள் செலவைக் கணக்கிடவும் (ஆங்கில மொழியில்)]
  6. நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லாத ஏழு விண்டோசு 7 கால்குலேட்டர் வசதிகள் (ஆங்கில மொழியில்)
  7. கால்குலேட்டர் (ஆங்கில மொழியில்)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கால்குலேட்டர்_(விண்டோசு)&oldid=3549341" இலிருந்து மீள்விக்கப்பட்டது