கால்கா காளி மாதா கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கால்கா காளி மாதா கோயில் என்பது இந்தியாவின், அரியானா மாநிலத்தின் பஞ்சகுலா மாவட்டத்தின், அமைந்துள்ள கால்கா நகரில் அமைந்துள்ள ஒரு காளி கோயிலாகும்.

தொன்மம்[தொகு]

முந்தைய யுகத்தில் மகிசாசுரம், சும்பன், நிசும்பன், சண்டன், முண்டன், ரக்தபீசன் போன்ற அரக்கர்கள் மக்களுக்கு சொல்லொன்னா கொடுமைகளைச் செய்தனர். அவர்கள் பார்தி தேவியிடம் முறையிட்டனர். அதனால் மக்களைக் காக்க அந்த அரக்கர்களை வதம் செய்ய முடிவு செய்தார். அதற்காக மிகப் பயங்கரமான மாகாளி என்ற உருவை எடுத்தார். மாகாளி ஆயிரம் கைகள், ஆயிரம் கால்கள் கொண்டவராக இருந்தார். மாகாளியின் இந்த உருவைப் பார்த்ததும் தேவர்கள் வணங்கினர். அவருக்கு தெய்வங்கள் பல்வேறு ஆயுதங்களை அளித்தனர். பிரம்மன் கமண்டலத்தையும், விஷ்ணு சக்கரத்தையும், இந்திரன் வஜ்ராயுதத்தையும், சிவன் திரிசூலத்தையும், எமன் பாசக் கயிறையும் அளித்தனர்.[1] காளி அரக்கர்களை கொல்ல சபதம் எடுத்துக் கொண்ட இடம்தான் கால்கா என்று அழைக்கப்படுகிறது.

கோயிலின் அமைப்பு[தொகு]

கால்கா காளி மாதா கோயிலானது கால்கா நகரின் சந்தையின் நடுவே அமைந்துள்ளது. கோயில் அமைந்துள்ள தெரு முனையில் ஒரு வளைவு அமைக்கப்பட்டுள்ளது. அதன் மேலே நடுவில் பிள்ளையாரும் அவருக்கு இடவலமாக பார்வதியும், இலட்சுமியும் உள்ளனர். கோயிலின் வெளிப்புறமாக காட்சியகம் போல மிகப் பெரிய ஒரு கண்ணாடிக் கூண்டு அமைக்கப்பட்டுள்ளது. அதனுள்ளே நாக்கைத் துருத்தியபடி பயங்கரமான தோற்றத்தில் காளி உள்ளார். அவர் கைகளில் அரிவாள், சூலம், வெட்டுண்ட அரக்கனின் தலை போன்றவை காணப்படுகின்றன.[1]

கோயில் கருவறையில் காளி முழுமையற்ற உருவத்துடன் உள்ளார். அவரது முகம் மட்டுமே தரைக்கு மேலே காணப்படுகிறது. காளியின் முகத்தை வெள்ளி நகைகள், கிரீடம் போன்றவற்றால் அலங்கரிக்கபட்டுள்ளது. முகத்தைச் சுற்றிலும் வட்ட வடிவில் பூக்கலாம் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.[1]

விழாக்கள்[தொகு]

இக்கோயிலில் மார்ச்-ஏப்ரல் மாதங்களில் திருவிழா நடத்தப்படுகிறது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "காளியின் அருள் பெற்ற கால்கா". இந்து தமிழ். 2023-சூன்-13. பார்க்கப்பட்ட நாள் 15 சனவரி 2024. {{cite web}}: Check date values in: |date= (help)
  2. Haryana Gazateer, Revenue Dept of Haryana, Capter-V.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கால்கா_காளி_மாதா_கோயில்&oldid=3928841" இலிருந்து மீள்விக்கப்பட்டது