காலம் கடந்த நீதி மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

காலம் கடந்த நீதி மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம் ( Justice delayed is justice denied ) என்பது ஒரு சட்ட அறம். பாதிக்கப்பட ஒருவர் தீர்வுக்கான நம்பிக்கை துளியும் இன்றி பாதிப்புகளையும் சுமந்து கொண்டிருப்பது நியாயமன்று என்னும் அடிப்படையில் விரைவான விசாரணை உள்ளிட்ட உரிமைகளைப் பெற்றுத் தர இந்தக் கூற்று வலியுறுத்துகிறது. உலகெங்கும் உள்ள அரசுகளும் நீதிமன்றங்களும் நடப்பில் உள்ள முறைகளின் சிக்கல்கள் காரணமாகவும் தேங்கியுள்ள வழக்குகளின் சுமை காரணமாகவும் குற்றம் சாட்டப்பட்டவருக்கு உள்ள அரசியல் பின்புலம் காரணமாகவும் மிக மெதுவாகச் செயல்படுவதாகக் கருதும் சட்டச் சீர்திருத்தக்காரர்கள், அவற்றுக்கு எதிரான தங்கள் செயற்பாடுகளுக்கு இக்கூற்றை அடிப்படையாக கொண்டு இயங்குகிறார்கள்[மேற்கோள் தேவை]