காற்றுக் குளிர்விப்பி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காற்றுக் குளிர்விப்பி என்பது ஓரிடத்தில் அல்லது ஓர் அறையில் உள்ள காற்றைக் குளிராக்கித் தரும் ஒருவகைச் செயற்கைக் கருவி. இது காற்றுச் சீரமைப்பி கருவியின் செயல்பாடுகளிலும், தொழில் நுட்பத்திலும் வேறுபட்டது.

  • காற்றுக் குளிர்விப்பி [1][2] நாம் ஊற்றும் தண்ணீரைத் தேவையான அளவு விசிறி ஓரிடத்தில் விசிறி அங்குள்ள காற்றைக் குளிராக்கித் தரும். திறந்த வெளியில், கதவு திறந்திருக்கும் அறையில் பயன்படுத்தப்படும்.
  • காற்றுச் சீரமைப்பி [3] மூடிய அறைக்ககுள் இருக்கும் காற்றைச் சூடாக்கியோ வெப்பமாக்கியோ தரும். திறந்த வெளியில் இதனைப் பயன்படுத்த முடியாது.

பாலைக் காற்றுக் குளிர்விப்பி [4][தொகு]

தமிழ்நாட்டுப் பொறியியல் கல்லூரி மாணவர்கள் மூவர் இதனை உருவாக்கியுள்ளனர்.[5][6] வெளியிலிருந்து காற்றை இழுத்து, நிரப்பி வைக்கப்பட்டுள்ள நீரால் ஈரமாக்கிப் பன்னாடை வழியாக விசிறும்போது பன்னாடை [7] ஈரத்திலிருந்து வரும் நறுமணக் காற்று இதில் குளுமை தருகிறது.

மேற்கோள்[தொகு]

  1. air-cooler
  2. காற்றுக் குளிர்விப்பி நல்லது
  3. air-conditioner
  4. டெசர்ட் ஏர் கூலர் - தினத்தந்தி இளைஞர் மலர் 27-4-2019 பக்கம் 3
  5. நாகை ஈ ஜி எஸ் பிள்ளை பொறியியல் கல்லூரி எந்திரவியல் மாணவர்கள் கிஷோர், கிங்சன், அம்ரேஷ் பிரவீன் ஆகிய மூவர்
  6. ஊக்கம் தந்து உதவிய ஆசிரியர்கள் சொக்கலிங்கம், சுப்பிரமணியன், குருமூர்த்தி, கல்லூரி முதல்வர் இராம்பாலன்
  7. பனை, தென்னை, பாக்கு, கூந்தல்-பனை போன்ற மரங்களில் அதன் மட்டைகளையும், காய்க் குலைகளையும் தாங்கும் வலை போன்ற இயற்கையான ஈர்க்குப் பின்னல்
"https://ta.wikipedia.org/w/index.php?title=காற்றுக்_குளிர்விப்பி&oldid=3074352" இலிருந்து மீள்விக்கப்பட்டது