உள்ளடக்கத்துக்குச் செல்

காற்பந்துச் சங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காற்பந்துச் சங்கம்
யூஈஎஃப்ஏ
Association crest
தோற்றம்அக்டோபர் 26, 1863
ஃபிஃபா இணைவு1905–1918
1924–1928
1945–
யூஈஎஃப்ஏ இணைவு1954
பன்னாட்டுக் காற்பந்துச் சங்க வாரியம் (IFAB) இணைவு1886
தலைவர்HRH The Duke of Cambridge
இணையதளம்www.thefa.com

காற்பந்துச் சங்கம் (The Football Association, எளிமையாக The FA), இங்கிலாந்தில் கால்பந்து மேலாண்மை அமைப்பாகும். 1863 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இதுவே, உலகின் மிகப் பழைமையான காற்பந்துச் சங்கம் ஆகும். இங்கிலாந்தில் அனைத்து நிலையிலுமான, தொழில்முறை மற்றும் விழைஞர் கால்பந்துக்கான நிர்வாக அமைப்பு இதுவாகும். இது நிறைய கால்பந்துப் போட்டிகளை நடத்துகிறது; அவற்றுள் புகழ்மிக்கது எஃப் ஏ கோப்பை (FA Cup) ஆகும். ஆண்கள், மகளிர் மற்றும் இளையோருக்கான தேசிய கால்பந்து அணிகளுக்கான நிர்வாகப் பணிகளுக்கு, தகுந்த ஆட்களை நியமிப்பது இதன் பணியாகும்.

ஐரோப்பிய காற்பந்து சங்கங்களின் ஒன்றியம் மற்றும் பன்னாட்டுக் காற்பந்துச் சங்கங்களின் கூட்டமைப்பு ஆகியவற்றில் கால்பந்துச் சங்கம் உறுப்பினராக உள்ளது. மேலும், பன்னாட்டுக் காற்பந்துச் சங்க வாரியத்தின் நிரந்தர உறுப்பினராகவும் இருக்கிறது; இந்த வாரியமே, காற்பந்து விளையாட்டுக்கான விதிகளை நிர்ணயம் செய்கிறது. உலகின் முதல் காற்பந்துச் சங்கம் என்பதால், அதன் பெயரில் தேசப்பெயர் இணைக்கப்படவில்லை; இதன் தலைமையகம் வெம்பிளி விளையாட்டரங்கம், இலண்டன்.

இங்கிலாந்தின் தொழின்முறைக் காற்பந்துக் கழகங்கள் அனைத்தும் காற்பந்துச் சங்கத்தின் உறுப்பினர்களாவர். பிரீமியர் லீகின் தினசரி செயற்பாடுகளில் காற்பந்துச் சங்கம் தலையிடாது; எனினும், பிரீமியர் லீகின் அவைத்தலைவர், செயற்குழுத் தலைவர் ஆகியோரை நியமித்தலிலும், பிரீமியர் லீக் விதிமுறைகளை மாற்றியமைப்பதிலும் இச்சங்கத்திற்கு மறுப்பதிகாரம் (Veto power) உண்டு.[1] பிரீமியர் லீக் நிலைக்குக் கீழேயுள்ள தொழின்முறை காற்பந்துக் கழகங்களின் காற்பந்துக் கூட்டிணைவு தன்னாளுகை அதிகாரம் உடையது.

குறிப்புதவிகள்[தொகு]

  1. "The Premier League and Other Football Bodies". Premier League. Archived from the original on 18 மார்ச் 2006. பார்க்கப்பட்ட நாள் 17 May 2007. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=காற்பந்துச்_சங்கம்&oldid=3549485" இலிருந்து மீள்விக்கப்பட்டது