கார்வா கோட்டை
Appearance
கார்வா கோட்டை Garhwa Fort | |
---|---|
அமைவிடம் | பிரயாக்ராஜ் |
கட்டப்பட்டது | 5-6 ஆம் நூற்றாண்டுகள் |
மீட்டெடுத்தவர் | இந்தியத் தொல்லியல் ஆய்வகம் |
கட்டிட முறை | இந்து கட்டடக் கலை |
நிர்வகிக்கும் அமைப்பு | இந்தியத் தொல்லியல் ஆய்வகம் |
கார்வா கோட்டை (Garhwa Fort) இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் உள்ள அலகாபாத்தில் உள்ள ஒரு கோயில் வளாகமாகும். இது குப்தர் காலத்தைச் சேர்ந்ததாகும்.[1][2] கோவிலின் இடிபாடுகள் 18 ஆம் நூற்றாண்டில் ராசா பாகேல் ராசா விக்ரமாதித்யாவால் பலப்படுத்தப்பட்டன. கோட்டை ஒரு வகையான சதுரமான உள்ளகம் மற்றும் அணிவகுப்புகளைக் கொண்ட தோற்றத்தைக் கொண்டுள்ளது. இந்த கோட்டையில் குப்தர் காலத்தைச் சேர்ந்த பல நினைவுச்சின்னங்கள் உள்ளன. இவை 5 மற்றும் 6 ஆம் நூற்றாண்டுகளுக்கு முந்தையவை. 11 அல்லது 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த விஷ்ணுவின் அனைத்து 10 அவதாரங்களையும் குறிக்கும் ஒரு உருவம் கோட்டையில் மிகவும் குறிப்பிடத்தக்கதாகும்.[3][4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "GOVERNMENT OF INDIA DEPARTMENT OF ARCHAEOLOGY CENTRAL ARCHÆOLOGICAL LIBRARY" (PDF). Indira Gandhi National Centre for the Arts. India: Indira Gandhi National Centre for the Arts.
- ↑ Kumar, Arjun (2018-12-20). "Some iconic, historical landmarks that lent Allahahad its identity & a new name". The Economic Times. India: தி எகனாமிக் டைம்ஸ். பார்க்கப்பட்ட நாள் 2019-10-04.
- ↑ Rashid, Omar (2013-03-30). "Rising from the ruins" (in en-IN). The Hindu (தி இந்து). https://www.thehindu.com/features/friday-review/history-and-culture/rising-from-the-ruins/article4558717.ece.
- ↑ "गढ़वा के किले में होगा इतिहास का दीदार". Dainik Jagran (in இந்தி). Dainik Jagran. பார்க்கப்பட்ட நாள் 2019-10-04.