கார்மன் கோடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வளிமண்டல அடுக்குகள்.[1] (not to scale)

கார்மன் கோடு (Kármán line) என்பது, புவியின் கடல் மட்டத்திலிருந்து 100 கிமீ (62 மைல்) உயரத்தில் இருப்பதாகக் கொள்ளப்படுகிறது. தோராயமாக, இதுவே புவியின் வளிமண்டலத்துக்கும் விண்வெளிக்குமான எல்லைக்கோடு ஆகும்.[2] இந்த வரையறையை பெடரேஷன் ஏரோனாடிக் இண்டர்நேஷனல் என்ற அமைப்பு ஏற்படுத்தி உள்ளது.[3]

அங்கேரிய-அமெரிக்க பொறியியளாளரும் இயற்பியலாளருமான தியோடர் வான் கார்மன் (1881-1963) என்பவரின் பெயரில் இது வழங்கப்படுகிறது. அவர் வானூர்தியியல் மற்றும் விண்ணூர்தியியல் துறைகளில் பெரும் முன்னேற்றங்களுக்கு இட்டுச்சென்ற ஆராய்ச்சிகளைப் புரிந்தவராவார். இவரே முதன்முதலில், இத்தகைய உயரத்தில் வளிமண்டலம் மிகவும் லேசானதாக மாறும் காரணத்தால், இதற்குமேலான உயரங்களில் வானூர்திகள் பறப்பதற்குத் தேவையான ஏற்றத்தை உருவாக்க இயலாது என கணக்கிட்டுக் கூறியவர் ஆவார். ஆகையால், இந்த உயரத்தில் பறக்கும் வானூர்திகள் சுற்றுப்பாதை வேகத்தைவிட அதிக வேகத்தில் பறந்தால்தான் தமக்குத் தேவையான காற்றியக்கவியல் ஏற்றத்தை உருவாக்க இயலும்.[4] இக்கோட்டுக்குக் கீழே வளிமண்டல வெப்பநிலையும் சூரிய கதிர்வீச்சுடனான வினையாற்றலும் பெருத்த அளவில் மாறுபடுகின்றன, ஆகையால் இக்கோடு தெர்மோஸ்பியர் எல்லைக்குள் இருக்கிறது.

உசாத்துணைகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கார்மன்_கோடு&oldid=3549241" இருந்து மீள்விக்கப்பட்டது