கார்பன் பசை மின்முனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒரு கார்பன்-பசை எலக்ட்ரோடு (Carbon-paste electrode) கடத்தும் தன்மையுடைய கிராபைட்டுத்தூள் மற்றும் ஒட்டும் திரவத்தின் கலவையிலிருந்து தயாரிக்கப்படும் மின்முனை ஆகும். இந்த மின்முனைகளை உருவாக்குவதற்கு எளிதானதாகவும் எலக்ட்ரான் பரிமாற்றத்திற்கு எளிதில் புதுப்பிக்கக்கூடிய மேற்பரப்பை வழங்குவதாகவும் உள்ளது. [1]கார்பன் பசை மின்முனைகள் பன்முகக் கார்பன் மின்முனைகளின் சிறப்புக் குழுவைச் சேர்ந்தவை. இந்த மின்முனைகள் முக்கியமாக வோல்டாஅளவியல் அளவீடுகளுக்கு பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன; இருப்பினும், கார்பன் பசை அடிப்படையிலான உணரிகள் கூலோஅளவியலிலும் பொருந்தும்.

நன்மைகள்[தொகு]

கார்பன் பசை மிகக் குறைந்த செலவில் எளிதாகப் பெறக்கூடியவையாக இருப்பதாலும் பிற சேர்மங்களின் கலவையுடன் மாற்றியமைக்கப்பட்ட மின்முனைப் பொருளைத் தயாரிப்பதற்கு ஏற்றதாகவும் இருப்பதால் இவ்வகை மின்முனைகள் மிகவும் பிரபலமானவையாக உள்ளன. மின்முனைக்கென இருக்க வேண்டிய சில முன் தீர்மானிக்கப்பட்ட பண்புகளை இவ்வகை மின்முனைகள் அளிக்கின்றன. இந்த வழியில் செய்யப்பட்ட மின்முனைகள் கனிம மற்றும் கரிம மின் வேதியியல் இரண்டிற்கும் மிகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட உணரிகளாகவும் விளங்குகின்றன. கார்பன் பசை, கண்ணாடி கார்பன் பசை, கண்ணாடி கார்பன் போன்றவை மாற்றியமைக்கப்படும் மின்முனைகள் வேதியியல்ரீதியாக மாற்றியமைக்கப்பட்ட மின்முனைகள் என்று அழைக்கப்படுகின்றன. வேதியியல்ரீதியாக மாற்றப்பட்ட மின்முனைகள் கனிம மற்றும் கரிம இனங்களின் பகுப்பாய்விற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன. [2]

குறைபாடுகள்[தொகு]

கார்பன் பசை மின்முனைகளின் மிகப்பெரிய குறைபாடு, நடைமுறைப் பகுப்பாய்வில் அவற்றின் பொருந்தக்கூடிய தன்மையைக் கட்டுப்படுத்துகிறது. கார்பன் பசை அடிப்படையிலான மின்முனைகளுடன் வேலை செய்வதில் வெற்றி என்பது பயனரின் அனுபவத்தைப் பொறுத்தது. எந்த வகையான திட மின்முனைகளுக்கும் இது உண்மையாக இருந்தாலும், கார்பன் பசை மின்முனைகள் ஒரு விதிவிலக்கான வழக்காக இருக்கிறது. வணிக ரீதியாக கிடைக்கக்கூடிய திட மின்முனைகளுக்கு மாறாக, ஒவ்வொரு உற்பத்தியாளரிடமிருந்தும் கிடைக்கக்கூடிய அனைத்து தயாரிப்புகளுக்கும் அடிப்படை மின்வேதியியல் பண்புகள் ஒப்பிடக்கூடியனவாக இருந்தாலும் ஒவ்வொரு கார்பன் பசை மின்முனை அலகும் தனித்த ஒன்றாகும். இவற்றின் இயற்பியல், வேதியியல் மற்றும் மின்வேதியியல் பண்புகள் ஒரு தயாரிப்பில் இருந்து மற்றொன்றுக்கு வேறுபடலாம். இந்த காரணத்திற்காக ஒவ்வொரு தனித்த மின்முனையும் தனித்தனியாக அளவீடு செய்யப்பட வேண்டும். ஆராய்ச்சி சூழலில் இது ஒரு பிரச்சினையாக இல்லாவிட்டாலும் கூட, உற்பத்தி சேவையில் இவ்வாறு செய்வது கணிசமான சுமையாக இருக்கும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Grygar, Tomáš; Marken, Frank; Schröder, Uwe; Scholz, Fritz (2002), "Electrochemical Analysis of Solids. A Review", Collection of Czechoslovak Chemical Communications (in ஆங்கிலம்), 67 (2): 163–208, doi:10.1135/cccc20020163, ISSN 1212-6950, பார்க்கப்பட்ட நாள் 2023-10-06
  2. Sanghavi, Bankim; Srivastava, Ashwini (2010). "Simultaneous voltammetric determination of acetaminophen, aspirin and caffeine using an in situ surfactant-modified multiwalled carbon nanotube paste electrode". Electrochimica Acta 55 (28): 8638–8648. doi:10.1016/j.electacta.2010.07.093. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கார்பன்_பசை_மின்முனை&oldid=3803929" இலிருந்து மீள்விக்கப்பட்டது