கார்த்திக் வெங்கடராமன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கார்த்திக் வெங்கடராமன்
நாடுஇந்தியா
பிறப்புதிசம்பர் 22, 1999 (1999-12-22) (அகவை 24)
வேலூர், தமிழ்நாடு, India
பட்டம்கிராண்டுமாசுட்டர் (2018)[1]
பிடே தரவுகோள்2506 (திசம்பர் 2021)
உச்சத் தரவுகோள்2565 (சூலை 2023)

கார்த்திக் வெங்கடராமன் (Karthik Venkataraman) இந்தியாவைச் சேர்ந்த ஒரு சதுரங்க விளையாட்டு வீரராவார். 1999 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 22 ஆம் தேதியன்று தமிழ்நாட்டின் வேலூர் நகரத்தில் இவர் பிறந்தார். 2018 ஆம் ஆண்டு இவருக்கு கிராண்டுமாசுட்டர் பட்டம் வழங்கப்பட்டது.

சதுரங்க வாழ்க்கை[தொகு]

கார்த்திக் 7 வயதில் சதுரங்கம் விளையாடத் தொடங்கினார்.[2] 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய தேசிய சதுரங்க வெற்றியாளர் போட்டியில், இறுதிச் சுற்றில் என்.ஆர். விசாகிற்கு எதிராக ஆட்டத்தை சமநிலையில் முடிவுக்கு கொண்டுவந்து அப்போட்டியை கார்த்திக் வென்றார்.[3]

2023 ஆம் ஆண்டு மே மாதத்தில் கார்த்திக் இந்திய சதுரங்க வெற்றியாளர் பட்டத்தை வென்றார்.[4]

கார்த்திக் 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற சதுரங்க உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்றார். அங்கு இவர் முதல் சுற்றில் கிரிகோரி கைடானோவை தோற்கடித்தார். ஆனால் இரண்டாவது சுற்றில் இகாரு நகமுராவால் தோற்கடிக்கப்பட்டார்.[5]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

சென்னையில் உள்ள எசு. ஆர். எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் முதுகலை வணிக மேலாண்மை படிப்பை படித்து வருகிறார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "FIDE Title Application (GM)" (PDF).
  2. 2.0 2.1 ""Checkmate: A Journey to the Top with India's National Chess Champion, GM Karthik Venkataraman"". February 2, 2023.
  3. "National Chess Championship: Karthik claims title as Abhijeet draws against Sayantan". sportstar.thehindu.com (in ஆங்கிலம்). 2023-01-03. பார்க்கப்பட்ட நாள் 2023-07-29.
  4. "Karthik Venkataraman wins 59. Indian Championship". Chess News (in ஆங்கிலம்). 2023-01-05. பார்க்கப்பட்ட நாள் 2023-07-29.
  5. "FIDE World Cup 2023: Preliminary lists of eligible players announced". www.fide.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-07-29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கார்த்திக்_வெங்கடராமன்&oldid=3793278" இலிருந்து மீள்விக்கப்பட்டது