கார்கி கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கார்கி கல்லூரி
Gargi College
வகைபொது
உருவாக்கம்1967 (1967)
முதல்வர்சங்கீதா பாத்யா
(பொறுப்பு)[1]
அமைவிடம்,
வளாகம்நகரம்
சேர்ப்புதில்லி பல்கலைக்கழகம்
இணையதளம்www.gargi.du.ac.in

கார்கி கல்லூரி (Gargi College) என்பது தில்லி பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்ற சிறந்த கல்லூரிகளில் ஒன்றாகும். இந்த மகளிர் கல்லூரி 1967ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இக்கல்லூரியில் கலை, மானுடவியல், வணிகம், அறிவியல் பிரிவுகளில் பெண்களுக்குக் கல்வி வழங்குகிறது.[2] கார்கி கல்லூரிக்கு இந்திய அரசின் உயிரித்தொழில்நுட்பவியல் துறை நட்சத்திரக் கல்லூரி தகுதியினை வழங்கியுள்ளது.[3]

வரலாறு[தொகு]

கார்கி கல்லூரி 1967ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. 

வேத காலத்தின் பிருஹதாரண்யக உபநிடதத்தில் உள்ள கார்கி வசக்னவி என்ற அறிவொளி பெற்ற பெண்ணின் நினைவாக இக்கல்லூரிக்கு கார்கி கல்லூரி பெயரிடப்பட்டது. 

2004-2005ஆம் ஆண்டில் பல்கலைக்கழக மானியக் குழுவினால், தில்லியில் உள்ள இரண்டு கல்லூரிகளில் ஒன்றான கார்கி கல்லூரி, சிறந்ததற்கான சாத்தியக்கூறு மானியத்துடன் கல்லூரிக்கு வழங்கப்பட்டது. கல்லூரியில் தாவரவியல், வேதியியல், வணிகவியல்,தொடக்கக் கல்வி, நுண்ணுயிரியல், இயற்பியல், உளவியல், விலங்கியல் மற்றும் மகளிர் மேம்பாட்டு மையம் ஆகிய ஒன்பது துறைகள் உள்ளன

தரவரிசைகள்[தொகு]

2022ஆம் ஆண்டில் தேசிய கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசை கட்டமைப்பின்படி இந்தியாவில் உள்ள கல்லூரிகளில் கல்லூரி 23-வது இடத்தினை இக்கல்லூரி பிடித்தது.[4]

இந்தியா டுடே கணக்கெடுப்பு, 2016-ன்படி இந்தியாவின் கலைக் கல்லூரிகளில் கார்கி 9வது இடத்தையும்,[5] அறிவியல் துறையில் 7வது இடத்தையும் பெற்றுள்ளது.

குறிப்பிடத்தக்க முன்னாள் மாணவர்கள்[தொகு]

  • அலங்கிரிதா சஹாய் - மிஸ் திவா எர்த் 2014 [6]
  • ஹூமா குரேசி - நடிகை [7]
  • சோனல் சவுகான் - பெமினா மிஸ் இந்தியா டூரிசம் 2005, மிஸ் வேர்ல்ட் டூரிசம் 2005, வடிவழகர் மற்றும் நடிகை.[8]
  • ஊர்வசி ரவுடேலா - மிஸ் திவா 2015 மற்றும் நடிகை
  • சன்யா மல்கோத்ரா - நடிகை[9]
  • சுவேதா பரத்வாஜ்-திரைப்பட நடிகை

மேற்கோள்கள்[தொகு]

  1. "Home Pages of People@DU" (PDF). gargi.du.ac.in. Archived from the original (PDF) on 2 ஜூலை 2016. பார்க்கப்பட்ட நாள் 28 September 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Gargi College | University Of Delhi". பார்க்கப்பட்ட நாள் 8 December 2019.
  3. "Gargi College | University Of Delhi". பார்க்கப்பட்ட நாள் 8 December 2019.
  4. https://www.shiksha.com/humanities-social-sciences/articles/top-delhi-university-du-colleges-blogId-14551
  5. "Gargi College Best Arts Colleges 2016 India Today Survey". indiatoday.intoday.in. பார்க்கப்பட்ட நாள் 18 December 2016.
  6. "Alankrita Sahai - Beauty Pageants - Indiatimes". Femina Miss India. http://beautypageants.indiatimes.com/miss-diva/miss-diva-contestants/2014/Alankrita-Sahai/articleshow/42346040.cms?from=mdr. 
  7. "Manaswini Magazine Gargi" (PDF).
  8. "Femina girl crowned Miss Tourism - Times of India". The Times of India. http://timesofindia.indiatimes.com/india/Femina-girl-crowned-Miss-Tourism/articleshow/1181314.cms. 
  9. "Meet Aamir Khan's on-screen daughter". Deccan Chronicle. 24 April 2015. பார்க்கப்பட்ட நாள் 8 December 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கார்கி_கல்லூரி&oldid=3935539" இலிருந்து மீள்விக்கப்பட்டது