காரி இரத்தினக் கவிராயர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருமேனி காரி இரத்தினக் கவிராயர் என்னும் உரைநூல் புலவர் பொ.ஊ. 16-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.[1] திருமேனி இரத்தினக் கவிராயர் என்றும் காரி இரத்தினக் கவிராயர் என்றும் இவர் அழைக்கப்படுகிறார். ஆழ்வார் திருநகரிக்கு அருகே மூன்று கல் தொலைவிலும் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகிலும் உள்ள தென் திருப்பேரை என்னும் ஊரில் பிறந்து வாழ்ந்தவர். இவர் திருக்குருகைப் பெருமாள் கவிராயரின் மாணாக்கர் ஆவார். இவரது பெயரில் உள்ள 'காரி' என்பது இவரது தந்தையின் பெயர். காயிலில் வாகனமாலை படிப்பதற்கு அக்காலத்தில் இவருக்கு மானியம் வழங்கப்பட்டிருந்தது. திருமாலை வழிபடும் குடும்பத்தைச் சேர்ந்தவர். எனினும், சைவ நூல்களையும் இவர் தமது உரையில் மேற்கோள் காட்டுகிறார். இவரது ஆசிரியர் திருக்குருகைப் பெருமாள் கவிராயர் 1540–1565 ஆண்டுகளில் வாழ்ந்தவர். எனவே இவரது காலம் 1550–1575 எனக் கொள்ளப்படுகிறது.

திருக்குறள் நுண்பொருள்மாலை என்னும் பெயரில் குறிப்புரை ஒன்றை இவர் எழுதியுள்ளார்.

  1. நயனப்பத்து
  2. பயோதரப்பத்து

என இவர் தமது உரையில் குறிப்பிடும் நூல்களைப் பற்றிய குறிப்பு வேறு எந்த நூலிலும் காணப்படவில்லை. நுண்பொருள்மாலையில் 639 குறள்களுக்கு மட்டுமே அவரது இலக்கண விளக்கம் கிடைத்துள்ளது.[2]

அடிக்குறிப்பு[தொகு]

  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1975, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, இரண்டாம் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. 
  2. சுந்தரமூர்த்தி, இ. (2020) (in ta). திருமேனி காரி இரத்தினக் கவிராயர் இயற்றிய நுன்பொருள் மாலை. சென்னை: சந்தியா பதிப்பகம். 
"https://ta.wikipedia.org/w/index.php?title=காரி_இரத்தினக்_கவிராயர்&oldid=3411037" இலிருந்து மீள்விக்கப்பட்டது