காரியா பூஜை
காரியா டெர் ('டெர்' என்பது கோக்போரோக் மொழியில் 'பண்டிகை' என்பதற்கான சொல்) பூர்வீக திரிபுரிய மக்களால் ஏழு நாட்களுக்குக் கொண்டாடப் படுகிறது. இது தந்தைக் கடவுளாகப் பார்க்கப்படும் பாபா காரியாவைப் போற்றும் வகையில் அனுசரிக்கப்படுகிறது. சித்திரை மாதத்தின் கடைசி நாளில் துவங்கி ஹரி புய்சு எனும் பண்டிகை நாள் வரை பொதுவாக ஆங்கில மாதமான ஏப்ரலில் [1]கொண்டாடப்படுகிறது. பூஜையின் முதல் நாள் 'மொகா புய்சு' என்றும், மூழ்கும் நாள் 'சேனா' என்றும் அழைக்கப்படுகிறது. கில்லா எனும் இடத்தில் விழா அமைக்கப்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் கூடித் தங்கள் வேண்டுதல்களை கடவுளிடம் இடுவர். பல்வேறு இனக் குழுவினர்களால் காரியா பூஜை அனுசரிக்கப்பட்டாலும் ஒருங்கினைப்பும் தயாரிப்பும் ஹோடா எனப் பொதுவாக அடையாளம் காணப்படும் ஜமாத்தியக் குழுவினருக்கான பொறுப்பாகும். காரியா பூஜையின் கண்டிப்பான விதியின்படி பூஜையிக்குத் தேவையான முக்கியப் பொருட்கள் அனைத்தும் கெர்பாங்க் என்றழைக்கப்படும் பூசாரியின் வீட்டில் பூட்டி வைக்கப்படுகின்றன.[2]
காரியா பூஜையின் தொடக்கத்தின் அடையாளமாக, பூஜைக்கு ஏழு நாட்களுக்கு முன்,கட்டாயமாக சுக்பார் தயார் செய்யப்படுகிறது. அன்றைய தினம் ஓராண்டில் பூட்டி வைக்கப்பட்டிருந்த பொருட்கள் அனைத்தும் வெளியே கொண்டு வரப்படுகின்றன. உடனடியான மேள தாளத்தின் சத்தம் பூஜையின் துவக்கத்தைக் குறிக்க, அதைத் தொடர்ந்து புல்லாங்குழலும் வாசிக்கப்படுகிறது. காரியா நடனமும் நிகழ்த்தப்படுகிறது. [3] திரிபுராவின் ஜமாத்தியா குலத்தில், காரியா பூஜை இரண்டு இடங்களில் முழு உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது:
- பியா குவாங்
- பியா குர்வி
காரியா பூஜையின் விதிகளை அச்சமூகமே தீர்மானித்து நெறிப்படுத்துகிறது. ஏழு நாட்களும் யாத்ரீகர்களின் இடர்பாடுகளுக்கு உதவ போக்லா குழு தேர்ந்தெடுக்கப்படுகிறது. மேலும் ஹோடாவின் ஏற்றுக்கொண்ட தீர்மானத்தின்படியும் பாரம்பரிய சடங்குகளின்படியும் போக்லாவை கண்கானிப்பதற்கும், வழிகாட்டுவதற்கும் மொஹண்டா குழு தெர்வு செய்யபப்டுகிறது. காரியா பூஜையின் போது ஒழுக்கம் மற்றும் அமைதியைப் பேணுவதற்காக ஒவ்வொரு பிராந்தியத்திலிருந்தும் இரண்டு கோரியா தன்னார்வலர்கள் ஒவ்வொரு ஆண்டும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ https://tripuratourism.gov.in/garia
- ↑ https://www.adivasilivesmatter.com/post/how-and-why-a-handful-of-rice-from-each-household-is-essential-to-celebrate-tripura-s-garia-puja
- ↑ "Garia dance or Garia mwsamung". Tripura.org.in. பார்க்கப்பட்ட நாள் 24 January 2012.