காரணிப்படுத்துதல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
a + b = c மற்றும் ab = d எனில், x2 + cx + d என்ற பல்லுறுப்புக்கோவையை (x + a) (x + b) எனக் காரணிப்படுத்தலாம்.

கணிதத்தில், காரணிமயமாக்கல் அல்லது காரணிப்படுத்துதல் அல்லது காரணியாக்கம் என்பது, ஒரு எண் அல்லது ஒரு கணித விரிவை ஒன்றுக்கும் மேற்பட்ட பல காரணிகளின்  பெறுக்கற்பலனாக, சிறிய அல்லது எளிமையான விரிவுகளாக எழுதுவதகும். எடுத்துக்காட்டாக, 3 × 5 என்பது முழு எண் 15 இன் காரணிமயமாக்கலாகும், மற்றும் (x - 2) ( x + 2) என்பது x2 -4 என்ற பல்லுறுப்புக்கோவை இன் காரணிமயமாக்கலாகும்.

எண்ணியலில் காணப்படும் வகுத்தல், அதாவது மெய்யெண் மற்றும் சிக்கலெண் போன்றவைகளுக்கு காரணிமயமாக்கல் பொதுவாக அர்த்தமுள்ளதாக கருதப்படுவதில்லை. எனெனில் எந்த ஒரு X ஐயும் XY *(1/Y)  அல்லது (Y ≠ 0) என எழுத முடியும். எவ்வாறாயினும், ஒரு அர்த்தமுள்ள காரணிமயமாக்கல் விகிதமுறு எண் அல்லது விகிதமுறு விரிவை அதை திட்டவடிவில் எழுதுவது மற்றும் பகுதியையும் தொகுதியையும் தனித்தனியாக காரணிப்படுத்துவதாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=காரணிப்படுத்துதல்&oldid=3896608" இலிருந்து மீள்விக்கப்பட்டது