உள்ளடக்கத்துக்குச் செல்

காப்புரிமைத் தகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காப்புரிமை தகுதி (patentability) என்பது காப்புரிமை பெற ஒரு கண்டுபிடிப்புக்கு இருக்க வேண்டிய தகுதியைக் குறிக்கின்றது. அந்தக் கண்டுபிடிப்பு சர்வதேச காப்புரிமை சட்ட விதிகளுக்கும், தேச சட்ட விதிகளுக்கும் உட்பட்டு இருக்க வேண்டும். அவ்வாறு இருப்பின் அக்கண்டுபிடிப்பு காப்புரிமை பெறத் தகுதியானதாகக் கருதப்படும்.

தகுதிகள்[தொகு]

காப்புரிமை வழங்குவதற்கான வழிமுறை, காப்புரிமையாளரிடம் வேண்டிய தேவைகள் மற்றும் பிரத்தியேக உரிமைகளின் அளவு ஆகியவை தேசிய சட்டங்கள் மற்றும் சர்வேதச ஒப்பந்தங்களைப் பொறுத்து நாடுகளுக்கிடையே பரவலாக வேறுபடுகின்றன.[1] இருப்பினும், எல்லா தேச, சர்வதேச காப்புரிமை சட்டங்களும் ஒரு சில பொதுவான காப்புரிமை தகுதி விதிகளை கொண்டிருகின்றன.

 • காப்புரிமை தகுதி பொருள்
 • புதியது (அ) புதுமையானது
 • பழைய கண்டுபிடிப்பில் புதிய முன்னேற்றம்
 • பயனுள்ளது

காப்புரிமை தகுதி பொருள்[தொகு]

பெரும்பாலான தேசிய அல்லது மண்டல காப்புரிமை சட்டங்கள் ,காப்புரிமை தகுதி பொருளை எதிர்மறையாக வரையறுகின்றன.அதாவது, எவையெல்லாம் காப்புரிமை பெற தகுதி அற்றவை என்பதை பட்டியலிடுகின்றன. அவற்றுள் ஒரு சில:

 • அறிவியல் கோட்பாடுகள்
 • அழகியல் படைப்புகள்
 • மன செயல்களை செய்ய திட்டங்கள் , விதிகள் மற்றும் வழிமுறைகள்
 • உலகில் ஏற்படும் இயற்கை நிகழ்வுகள்
 • பொது ஒழுங்கு , நல்ல ஒழுக்கம் அல்லது பொது சுகாதாரத்தை பாதிக்கும் கண்டுபிடிப்புகள்
 • மனிதர்கள் அல்லது விலங்குகளுக்கான நோய் கண்டறியும் சிகிச்சை, மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை முறைகள்.

புதியது (அ) புதுமையானது[தொகு]

ஒரு கண்டுபிடிப்பானது , முதல் விண்ணப்ப தேதிக்கு முன் (First filing date) , உலகின் எந்த ஒரு இடத்திலும் அறிந்திராததாகவும், கிடைக்கப்பெறாததாகவும் (Prior Art) இருப்பின், அது புதியது (அ) புதுமையானதாகக் கருதப்படும்.

பொதுவாக, வெளியிடப்பட்ட தகவல் (அ) கிடைக்கபெறும் தகவல் (அ) அறியப்பட்ட தகவல் (prior art) என்பது, முதல் விண்ணப்ப தேதிக்கு முன், உலகின் எந்த ஒரு பகுதியிலும் கிடைக்கபெறும், காப்புரிமை பெற விண்ணபிக்கபட்ட கண்டுபிடிப்பு தொடர்புடைய தகவல்களை குறிக்கும். இந்த தகவல்களை நிர்ணயிக்கும் காப்புரிமை சட்டம், வெவ்வேறு நாடுகளுக்கிடையே வேறுபடும். பல நாடுகளில், எழுத்து வடிவிலோ, செவிவழி வடிவிலோ, காட்சி வடிவிலோ கிடைக்கபெறும் தகவல்கள் அறியப்பட்ட தகவல்களாக வரையறுக்கபட்டிருகிறது. மேலும், நிலுவையில் உள்ள, வெளியிடப்படாத காப்புரிமை விண்ணப்பங்களும் அறியப்பட்ட தகவல்களாகவே கருதப்படுகிறன.

பழைய கண்டுபிடிப்பில் புதிய முன்னேற்றம்[தொகு]

ஒரு கண்டுபிடிப்பானது, அறியப்பட்ட தகவல்களுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது அதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இருக்க வேண்டும். அம்முன்னேற்றமனது , அக்கண்டுபிடிப்புடன் தொடர்புடைய துறையில், நடுத்தர திறமையுடைய நபரால் ஏற்கனவே அறியப்பட்ட தகவலிலிருந்து எளிதில் யூகிக்க முடியாததாக இருத்தல் வேண்டும்.அதாவது அம்முன்னேற்றமானது ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்ததாக இருத்தல் வேண்டும்.பெரும்பாலான கண்டுபிடிப்புகள் இந்த காப்புரிமை தகுதியை பெற்றிருப்பதில்லை.

பயனுள்ளது[தொகு]

ஒரு கண்டுபிடிப்பானது, தொழிற்துறை அல்லது வணிகத்துறையில் பயன்படகூடியதாக (அ) செயல்படகூடியதாக இருத்தல் வேண்டும். அதாவது வெறும் யோசனையோ , திட்டமோ , கருத்தோ காப்புரிமை பெற தகுதியற்றதாகும்.

மேற்கோள்கள்[தொகு]

 1. இணைப்பு உரை, கூடுதல் உரை.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காப்புரிமைத்_தகுதி&oldid=3439353" இலிருந்து மீள்விக்கப்பட்டது