காப்சா
காப்ட்சா (Captcha) என்பது இணைய வழியாகவோ நேரடியாகவோ ஒரு கணினியுடன் தொடர்பு கொள்ளப் பயன்படும் புகுபதிகை உள்ளீடு கடவுச்சொல் உட்பட ஒரு மனிதனால் செய்யப்படுகின்றதா அல்லது தானியங்கி வழி புகுபதிகை செய்யப்படுகின்றதா என தேர்வு செய்யும் ஒரு மென்பொருள்நிரலிஆகும். இதன் பயன் தானியங்கிவழி பலவகையான இடையூறுகள் செய்பவர்களைக் கட்டுப்படுத்துவதாகும். காப்ட்சா (CAPTCHA) என்பது கார்னிகி மெலன் பல்கலைக்கழகத்தின் காப்புரிமைகொண்ட வணிக அடையாள எழுத்தடை. இது ஒரு சொற்றொடரின் சுருக்கெழுத்துக் கூட்டுச்சொல். கணினிகளையும் மனிதரையும் வேறுபடுத்திக் காட்ட, முழுவதும் தானியங்கியாய் தொழிற்படும், பொதுவில் இயங்கும் டூரிங் சோதனை (உரைகல்). (Completely Automated Public Turing test to tell Computers and Humans"' Apart).
புகுபதிகையின் போதோ, பின்னூட்டத்தின்போதோ இணையதளங்களில் ஒரு படமும் அதில் பெரிய அளவிளான எழுத்துக்கள் நெளிந்தும் குழிந்தும் கோணல்மாணலாகவோ, மங்கியதாகவோ, அல்லது அதன்மீது கிறுக்கியுமோ இருக்கக் காண்பீர்கள். அதன் அருகில் ஒரு எழுத்துப்பெட்டி (Textbox) இருக்கும். அதில் படத்திலுள்ள வளைந்து நெளிந்து திரிபுற்ற சொற்களை அந்த எழுத்துப்பெட்டியில் (TextBox) இட வேண்டும் (தட்டச்சு செய்ய வேண்டும்). பிறகு அந்த பக்கத்தை அனுப்புவதற்கான பொத்தானை அழுத்தவேண்டும்.
இணையதளப் பயனர்கள் புகுபதிகை செய்யும்பொழுது தவறுதலாக கடவுச்சொல்லையோ, பயனர் முகவரியையோ தட்டச்சிட நேரிடும். அப்பொழுது புகுபதிகையில் எழுதப்பட்டிருக்கும் நிரலி இந்த பயனர் எரிதல் (spam) மூலம் புகுபதிகை செய்ய முயலுவதாக பாவித்து (நினைத்து) (கீழே உள்ளது போல்) இன்னொரு பக்கத்திற்கு அழைத்துச் செல்லும். அங்கு ஒரு படத்தில் வேறு எழுத்துக்கோர்வை இருக்கும் அதிலுள்ள எழுத்துக்கள் கோணல்மாணலாகவும் மங்கியதாகவும், இன்னும் அந்த எழுத்துக்கோர்வையின் மேல் கிறுக்கியும் இருக்கும். பயனர் மனிதராக இருந்தால் அவர் அந்த படத்திலுள்ள எழுத்துக் கோவைகளை தெரிந்து தட்டச்சிடுவார்.
படத்திலுள்ள எழுத்துக்கள் வேவ்வெறு வடிவங்களில் வருவதால் தானியங்கி நிரலியால் எழுத்துக் கோவை என்று அறிய முடியாது. அதனால் எரிதல்களை கட்டுப்படுத்த முடியும்.call
காப்ட்சா நிரலி துணை
[தொகு]பி.ஹெச். பி யில் GD லைப்ரரியைக்கொண்டே அநேக காப்ட்சாக்கள் உருவாக்கப்படுகின்றன. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் டாட்.நெட் (dot net) லும் இவைகளை எழுத முடியும்.
ஒருங்குறி (யுனிகோடை) பயன்படுத்தியும் காப்ட்சா உருவாக்கமுடியும். தமிழில் காப்ட்சா உள்ளீடும் முறை இன்னும் உருவாக்கப்படவில்லை.
காப்ட்சாவை முறியடிக்கும் வழிகள்
[தொகு]- அமல்படுத்திய முறையில் உள்ள பிழைகளை கண்டுபிடித்து, அதற்கு தகுந்த தாக்குதல் நடத்தலாம்.
- எழுத்துக்களை உறுதி செய்யும் மென்பொருளை மேம்படுத்தலாம்.
- மலிவான மனித உழைப்பை பயன்படுத்தி மொத்தமாக காப்ட்சாவுக்கு இணையான எழுத்துக்களை பெற்றுக்கொள்ளலாம்.