கான் பகதூர் கான் ரோகில்லா
Appearance
கான் பகதூர் கான் ரோகில்லா (Khan Bahadur Khan Rohilla) முகலாயப் பேரரசில் மூன்று பேர்ரசர்களிடம் பணிபுரிந்த அபீசு ரகமத் கானின் பெயரானாவார். இவர் வாழ்ந்த காலம் 1823 முதல் 1860 ஆம் ஆண்டு வரையிலான காலமாகும். 1857 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களுக்கு எதிராக நடைபெற்ற இந்திய சுதந்திரப் போரில் பரேலியில் தனது சொந்த அரசாங்கத்தை இவர் உருவாக்கினார். 1857 ஆம் ஆண்டு இந்திய விடுதலைப்போர் தோல்வியடைந்தபோது, பரேலியும் ஆங்கிலேயரிடம் வீழ்ந்தது.கான் பகதூர் கான் ரோகில்லா நேபாளத்திற்கு தப்பிச் சென்றார். அங்கு நேபாளிகள் இவரைக் கைப்பற்றி ஆங்கிலேயரிடம் ஒப்படைத்தனர். கான் பகதூர் கான் ரோகில்லாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு 1860 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 அன்று கோட்வாலியில் தூக்கிலிடப்பட்டார்.[1][2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Khan Bahadur Khan Rohilla and the War of Independence The News International , Published 13 June 2016, Retrieved 3 January 2018
- ↑ Rohilla chieftain Khan Bahadur Khan on GoogleBooks website Retrieved 3 June 2018