காந்தி ஆசிரம அறக்கட்டளை
காந்தி ஆசிரம அறக்கட்டளை அல்லது அம்பிகா காளிகங்கா தொண்டு அறக்கட்டளை ( Gandhi Ashram Trust (GAT), also called the Ambika-Kaliganga Charitable Trust) என்பது 1946 முதல் நவகாளியில் கிராமப்புற வளர்ச்சிக்காக காந்திய தத்துவத்துடன் செயலாற்றிவரும் ஒரு அமைப்பு ஆகும்.[1]
1947இல் நவகாளிக்கு காந்தி வந்தார். இதனால் அப்பகுதியின் கிராமப்புற வளர்ச்சி மற்றும் அமைதியை குறிப்பாக சமூக நல்லிணக்கம், பெண்கள் முன்னேற்றம் போன்றவற்றை காந்திய வழியில் ஏற்படுத்த இந்த அறக்கட்டளை உருவாக்கப்பட்டது.
நவகாளியில் 1946இல் இந்து- முஸ்லிம் கலவரம் வெடித்தது. அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்காக காந்தியவழியில் பணியாற்ற ஹேமந்த் குமார் என்பவர் தனது சொத்துகளை எழுதிவைத்தார். அதை வைத்து ஜயாக் கிராமத்தில் அம்பிகா காளிகங்கா தொண்டு அறக்கட்டளை நிறுவப்பட்டது. பிரிவினைக்குப் பிறகு ஏற்பட்ட பாக்கித்தானிய அரசாங்கத்தின் கொள்கைகள் காரணமாக அறக்கட்டளை தன் செயல்பாடுகளை தொடர இயலாத நிலை ஏற்பட்டது.
1971இல் வங்காளதேசம் விடுதலை பெற்று தனிநாடான பிறகு, புத்துயுர்பெற்ற அறக்கட்டளையானது 1975இல் காந்தி ஆசிரம அறக்கட்டளை என்று பெயர் மாற்றப்பட்டது. அதன் பிறகு அங்கு அமைதி, கிராம முன்னேற்றம், சமூக ஒற்றுமை ஆகியவற்றுக்காக இந்த ஆசிரமம் பணியாற்றிவருகிறது.
இது வங்காளதேசத்தின் தென்பகுதியில் உள்ள ஐந்து மாவட்டங்களில் செயல்பட்டு வருகிறது. அமைதியை வளர்த்தல், மனித வளர்ச்சி, மனித உரிமைகள், நல்லாட்சி, கைவினைப் பணி ஊக்குவிப்பு, கல்வி போன்றவை இந்த அமைப்பின் முதன்மை செயல்பாடுகளாக உள்ளன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Bhuiyan, Sultan Mahmud (2012). "Gandhi Ashram". In Islam, Sirajul; Jamal, Ahmed A. (eds.). Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ed.). Asiatic Society of Bangladesh.