காந்தாரி மிளகாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
காந்தாரி மிளகாய்
காந்தாரி மிளகாய் செடி

காந்தாரி மிளகாய் காய்கறிகளில் ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது, இவ்வகை மிளகாயை சிவப்பு மிளகாய் அல்லது கார மிளகாய் என்றழைக்கிறோம். கன்னியாகுமரி மாவட்டத்தில் மார்த்தாண்டம் பகுதிகளில் சாகுபடி செய்யப்படுகிறது.மிளகாய், பார்ப்பதற்கு சிறியதாக இருந்தாலும், காரத்தில் சிறப்பானது. பச்சை, நீலம், ஊதா நிறங்களில் காணப்படும் இந்த மிளகாய், பழுத்தால் சிகப்பு நிறத்துக்கு மாறி விடுகிறது. நீலகிரி மாவட்டம், பந்தலுார், கூடலுார் பகுதிகளில், இந்த மிளகாய்குறைந்தளவில்விளைவிக்கப்படுகிறது.இதில், புரோட்டின், கொழுப்பு, இரும்பு, கால்சியம், வைட்டமின் சத்துகள் அதிகளவில் உள்ளன. இந்த மிளகாய்க்கு, கேரளாவில் கிராக்கி உள்ளது. ரத்தக்கொதிப்பு, வாதம், மூட்டுவலி, காசநோய், சளி போன்றவற்றை, கட்டுப்படுத்தும் மருந்தாக உள்ள காந்தாரி மிளகாய், ஆயுர்வேத மருந்து உற்பத்திக்கு அதிகளவில் பயன்படுத்தப் படுகிறது.பந்தலுார் பகுதியில், தற்போது கிலோ ஒன்றுக்கு, 300 முதல் 400 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், கேரளாவில், 600 ரூபாய் வரை, விற்பனை செய்யப்படுவதால், நீலகிரி விவசாயிகள், இதை கேரளாவுக்கு அதிகளவில் அனுப்பி வருகின்றனர்.காந்தாரி மிளகாய் செடியின் இலைகள், வீக்கங்கள் மற்றும் கட்டிகளை போக்கும் மகத்துவம் பெற்றது. இதில் காயின் மத்திய நஞ்சுக் கொடியில் ‘கேப்சின்’ என்ற காரமான பொருள் உள்ளது. இதில் பொதுவாக கேப்சைசின் வீதம் 0.2-0.4%. வைட்டமின் சி போதுமான அளவில் உள்ளது. நம் உணவில் மணம் மற்றும் சுவைக்கு மிளகாய் போன்ற காரமான காய்கறி மிகவும் அவசியமாக உள்ளது. இந்த காரமானது இயற்கையாகவே நம்மை நோயிலிருந்து பாதுகாக்கிறது. மிளகாயில் காப்சைசின் 0.5% அதிகமாக இருப்பதால் மற்ற வகைகளை விட இது மேலும் காரமானதாக உள்ளது.இதில் புரோட்டீன், கொழுப்பு, இரும்பு, கால்சியம், வைட்டமின் சத்துகள் அதிகளவில் உள்ளன. ரத்தக்கொதிப்பு, வாதம், மூட்டுவலி, காசநோய், சளி போன்றவற்றை, கட்டுப்படுத்தும் மருந்தாக உள்ள காந்தாரி மிளகாய், ஆயுர்வேத மருந்து உற்பத்திக்கு அதிகளவில் பயன்படுத்தப் படுகிறது.[1] மேற்கோள்கள்[2][தொகு]

  1. {{cite web}} வார்ப்புருவை பயன்படுத்துகையில் title = , url = என்பவற்றைக் கட்டாயம் குறிப்பிடவேண்டும்."". பார்த்த நாள் 2 சூலை 2017.
  2. http://m.dinamalar.com/detail.php?id=1141373
"https://ta.wikipedia.org/w/index.php?title=காந்தாரி_மிளகாய்&oldid=2724496" இருந்து மீள்விக்கப்பட்டது