உள்ளடக்கத்துக்குச் செல்

காத்தி அய்சக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காத்தி அய்சக்
Kate Isaak
பணியிடங்கள்[[கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்
கார்திப் பல்கலைக்கழகம்
ஐரோப்பிய விண்வெளி முகமை]]
கல்வி கற்ற இடங்கள்கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் (கலை இளவல்,முனைவர்)
ஆய்வேடுமில்லிமீட்டருக்கும் குறைந்த அலைநீளத் தாழ் இரைச்சல் கருவியாக்கம், உயர் செம்பெயர்ச்சிப் பொருள்களின் வானியல் நோக்கீடுகள். (1995)

காத்திரைன் குத்திருன் அய்சக் (Katherine Gudrun Isaak) ஒரு பிரித்தானிய வானியற்பியலாளர் ஆவார். இவர் ஐரோப்பிய முகமையில் புறவெளிக் கோள் விண்கலத் திட்ட அறிவியலாளராக உள்ளார். இவர் ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி, தொழில்நுட்ப மையத்தில் பணிபுரிகிறார்.

இளமையும் கல்வியும்

[தொகு]

இவர் பெரும்பிரித்தானியாவில் பிறந்து வளர்ந்தார்.[1] இவர் இரண்டு அறிவியல் அறிஞர்களின் மகள் ஆவார்.[1] இவர் இயற்பியல் வகுப்பில் சிறுவர்களைவிட சிறுமிகள் கூடுதலாக இருந்த இருபாலர் பள்ளியில் படித்துள்ளார். இவர் தன் வகுப்பு இயற்பியல், வேதியியல் ஆசிரியர்கள் தனக்கு அளித்த ஒத்துழைப்புக்காகவும் அறிவியலாளராகத் த்னக்கு ஊக்கம் ஊட்டியதற்காகவும் அவர்களைப் பெரிதும் உவகையுடன் பாராட்டுகிறார்.[2] இவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படித்தார். அப்போது கேம்பிரிட்ஜில் உள்ள முரே எடுவார்டு கல்லூரியில் உறுப்பினராகவும் இருந்துள்ளார். இவர் கேம்பிரிட்ஜில் இருந்தபோது ஓவன் சாக்சுட்டன் (அப்போது அங்கே இயற்பியலில் தகவுறு ஆய்வுறுப்பினராக இருந்து பின்னர் ஆராய்ச்சி இயக்குநர் ஆனவர்)) இவருக்கு முழு ஆதரவை நல்கியுள்ளார் .[3] இவர் அங்கு இயற்கை அறிவியல் பயின்று, இறுதியாண்டில் இயற்பியலைச் சிறப்பு பாடமாக எடுத்துக் கொண்டுள்ளார். இவர் அங்கேயே தங்கி முனைவர் ஆய்வும் மேற்கொண்டுள்ளார். அப்போது வானியலுக்கான நுண்ணளவு(மில்லிமிட்டருக்கும் குறைவான அளவு) கருவியொன்றை வடிவமைத்துள்ளார். இவரது முனைவர் ஆய்வுமிகத் தொலைவில் உள்ள பால்வெளிகளைப் பற்றியதாகும். பிறகு த முதுமுனைவர் பட்ட ஆய்வு உதவியாளராக மசாசூசட்டுக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளார்.[1]

ஆராய்ச்சியும் வாழ்க்கைப்பணியும்

[தொகு]

இவர் தன் உயர் செம்பெயர்ச்சிக் குவேசார்களை நோக்க ஜேம்சு கிளார்க்கு மாக்சுவெல்லின் தொலைநோக்கியைப் ப்யன்படுத்தினார்.[4] இந்த ஆய்வில் உயர் செம்பெயர்ச்சிக் குவேசார்களின் கண்டுபிடிப்பில் உடுக்கண வெளித்தூசு பற்றிய ஆய்வும் உள்ளடங்கும். இக்காலத்தில் கட்புலப் புடவியில் மிகத் தொலைவில் அமைந்த நோக்கவியன்ற உடுக்கண வெளித்தூசு இதுவே ஆகும்.[5][6]

இவர் கார்திப் பல்கலைக்கழகத்தில் பண்புரிந்தபோதே 2004 இல் ஐரோப்பிய விண்வெளி முகமையிலும் பணிபுரிந்தார்]. இங்கு இவர் குவெனிபர் இரேமாண்டு என்பவருக்கு முனைவர் பட்ட வழிகாட்டியானார். இருந்தாலும் குவெனிபர் பின்னாளில் பெயெர்பெற்ற இசை வல்லுனராக விளங்கலானார்.[7] இவர் சுப்பிகா(SPICA) விண்கலத் திட்ட்த்தில் பங்கேற்று சுப்பைர்(SPIRE) கருவியை எர்ழ்சல் விண்வெளி நோக்கீட்டகத்துக்காக உருவாக்கினா.[8][9]

அய்சக் 2010 இல் ஐரோப்பிய விண்வெளி முகமையில் சேர்ந்தார்.[10] அப்போது இவர் ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி, தொழில்நுட்ப மையத்தில் பணிக்கமர்த்தப்பட்டார்.[11] இவர் சியோப்சு அமைப்புக்கான ஐரோப்பிய விண்வெளி முகமையின் திட்ட அறிவியலாளர் ஆவார்.[12][13] சியோப்சு(CHEOPS) என்பது 2012 ஆம் ஆண்டில் S-வகைத் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட புறவெளிக் கோள்களின் ஆரங்களை அளக்கும் அமைப்பாகும்.[14][15] இவர் புறவெளிக்கோள் பெருங்குறுக்கீட்டளவி ஆக்க விண்வெளித் திட்டக் குழுவின் உறுப்பின ஆவார்.[16]

தேர்ந்தெடுத்த வெளியீடுகள்

[தொகு]

இவரது வெளியீடுகள் கீழே உள்ளன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 "Meet Dr Kate Isaak". www.space-awareness.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-12-30.
  2. EU Space Awareness Career Interviews: Kate Isaak, Project Scientist // 02 Early experience (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2019-12-30
  3. "Dr W Owen Saxton". Murray Edwards College - University of Cambridge (in ஆங்கிலம்). 2015-07-27. பார்க்கப்பட்ட நாள் 2019-12-30.
  4. Isaak, K. G.; McMahon, R. G.; Hills, R. E.; Withington, S. (July 1994). "Observations of high-redshift objects at submillimetre wavelengths." (in en). MNRAS 269: L28–L32. doi:10.1093/mnras/269.1.L28. பன்னாட்டுத் தர தொடர் எண்:0035-8711. Bibcode: 1994MNRAS.269L..28I. 
  5. "Spaceflight Now | Breaking News | Astronomers detect stellar ashes at the dawn of time". spaceflightnow.com. பார்க்கப்பட்ட நாள் 2019-12-30.
  6. Cox, P.; Omont, A.; Djorgovski, S. G.; Bertoldi, F.; Pety, J.; Carilli, C. L.; Isaak, K. G.; Beelen, A. et al. (May 2002). "CO and Dust in PSS 2322+1944 at a redshift of 4.12" (in en). Astronomy & Astrophysics 387: 406–411. doi:10.1051/0004-6361:20020382. பன்னாட்டுத் தர தொடர் எண்:0004-6361. Bibcode: 2002A&A...387..406C. 
  7. Raymond, Gwenifer; Isaak, Kate G.; Clements, Dave; Rykala, Adam; Pearson, Chris (2010-06-25). "The Effectiveness of Mid IR / Far IR Blind, Wide Area, Spectral Surveys in Breaking the Confusion Limit". Publications of the Astronomical Society of Japan 62 (3): 697–708. doi:10.1093/pasj/62.3.697. பன்னாட்டுத் தர தொடர் எண்:0004-6264. Bibcode: 2010PASJ...62..697R. 
  8. Swinyard, Bruce; Nakagawa, Takao; Matsuhara, Hideo; Griffin, Doug; Ferlet, Marc; Eccleston, Paul; di Giorgio, Anna; Baselmans, Jochem et al. (2008-07-12). Oschmann, Jr, Jacobus M; De Graauw, Mattheus W. M; MacEwen, Howard A. eds. "The European contribution to the SPICA mission". Space Telescopes and Instrumentation 2008: Optical, Infrared, and Millimeter (SPIE) 7010: 70100I. doi:10.1117/12.789195. Bibcode: 2008SPIE.7010E..0IS. 
  9. "November 12, 2009". In the Dark (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-12-30.
  10. "Kate Isaak, ESA CHEOPS Project Scientist". www.esa.int (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-12-30.
  11. "Kate Isaak". spie.org. பார்க்கப்பட்ட நாள் 2019-12-30.
  12. "European space telescope to measure distant worlds". BBC News (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-12-30.
  13. "Kate Isaak - Personal Profiles - Cosmos". www.cosmos.esa.int. பார்க்கப்பட்ட நாள் 2019-12-30.
  14. "European Space Agency launches CHEOPS exoplanet mission". Physics World (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). 2019-12-18. பார்க்கப்பட்ட நாள் 2019-12-30.
  15. Isaak, K. G.; Benz, W. (September 2019). "The next exoplanet mission to fly" (in en). Nature Astronomy 3 (9): 873. doi:10.1038/s41550-019-0886-9. பன்னாட்டுத் தர தொடர் எண்:2397-3366. Bibcode: 2019NatAs...3..873I. https://www.nature.com/articles/s41550-019-0886-9. 
  16. "Team". LIFE space mission (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-12-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காத்தி_அய்சக்&oldid=3951392" இலிருந்து மீள்விக்கப்பட்டது