காது அடையாள வில்லை
Jump to navigation
Jump to search

காது வில்லை பொருத்தப்பட்ட ஒரு செம்மறியாடு.
கால்நடைகளுக்கு அடையாள வில்லை (Ear tag) இடுதல் எப்பது கால்நடைகளை பல்வேறு காரணங்களுக்காக அடையாளம் காண பயன்படுத்தும் ஒரு முறையாகும். கால்நடைகளை அடையாளம் காண்பதற்காக இயற்கை அடையாளங்கள் மட்டுமின்றி செயற்கையாக பல்வேறு முறைகளில் கண்டு கொள்ளப்படுகிறது. அவை பச்சை குத்துதல், சூடு போடுதல், காதுவில்லைகள் பொருத்தல், கழுத்து பட்டைகளை அணுவித்தல், வர்ணம் பூசுதல், கொம்பு மற்றும் குளம்புகளில் எண்கள் பொறித்தல், காதுகளை கத்தரித்தல் போன்றவைகளாகும். பொதுவாக காதுகளில் வில்லை பொருத்தும் முறை பரவலாக பின்பற்றபடுகிறது.
அடையாள வில்லை இடும் முறை[தொகு]
கால்நடைகளின் இடது காதை சுத்தபடுத்தி துளையிடும் கருவியை கொண்டு துளையிட்டு பித்தளை அல்லது பாலியூரித்தேன் பிளாஸ்டிக்கினால் ஆன வில்லைகளை பொருத்தப்படுகிறது.[1]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம். தொழிற்கல்வி மேல்நிலை இரண்டாம் ஆண்டு